India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்டத்தில் வீரதீர செயல்கள் புரிந்த பெண் குழந்தைகள், பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம். இந்திய குடியுரிமையுடன் 5 முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், awards.gov.in என்ற இணையதள முகவரியில் ஜூலை 31-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் ஜூலை 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் தங்கள் கிராமத்திற்கு ஆய்வு மேற்கொள்ள வரும் மாவட்ட நிலை அலுவலரிடம் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்கள் (ம) தங்கள் கிராமத்திற்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த உறுதி மொழியினை மாவட்ட ஆட்சியர் கற்பகம் வாசிக்க அதனை தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி ஷ்யாம்ளாதேவி, இணை இயக்குனர் மரு. மாரிமுத்து, குடும்ப நல இயக்குனர் மரு. ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக நாட்டுக்கோழிகளை வளர்ப்பதில் திறன் கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு நாட்டுக்கோழி பண்ணைகள் அமைக்க 50% மானியம் வழங்கப்பட உள்ளது. பயனாளிகள் அருகாமையில் உள்ள கால்நடை மருந்தகங்களில் விண்ணப்பத்தினை பெற்று உரிய விபரங்களுடன் பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயன்பெறுமாறு ஆட்சியர் கற்பகம் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், வட்டார அளவிலான குழு கூட்டமைப்புகளில் தணிக்கைக்கான தணிக்கையாளர்கள் அல்லது தணிக்கை நிறுவனங்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. மேலும் விவரங்களுக்கு 04328-255362, 9444064136 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூரில் அமைச்சர் சிவசங்கர் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.அதில் 20,000 பேருந்துகள் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் புதிதாக 7,500 பேருந்துகள் வாங்கி அதில் 600 க்கும் மேற்பட்டோர் பணியமர்த்த உள்ளனர். இதர மாநிலங்களில் டீசல், பெட்ரோல் விலை உயரும் போது பஸ் கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் கட்டணத்தை உயர்த்தாமலேயே கழகத்தை நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என கூறினார்.
மலையாளபட்டி அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில் ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகிய 3 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு தொகுப்பு ஊதியத்தில் தற்காலிகமாக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி உள்ளவர்கள் விண்ணப்பங்களை ஜூலை.15 க்குள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல் நீக்கல் பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும் சிறப்பு பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் முகாம் ஜூலை 13ம் தேதி நொச்சியம், அயன் பேரையூர், கீழப்புலியூர், திம்மூர் ஆகிய கிராமத்தில் முகாம் நடைபெற உள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி ஜூலை.30 அன்றும், முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளையொட்டி ஜூலை.31 அன்று பேச்சுப் போட்டிகள் பெரம்பலூர் பாரத சாரண, சாரணியர் பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளது. இதில் முற்பகல் 10 மணிக்கு பள்ளி மாணவர்களுக்கும், பிற்பகல் 02.00 மணிக்கு கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் பங்கேற்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்
பெரம்பலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்போருக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.100, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 வீதம் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆர்வமுள்ளவர்கள் https://tnvelaivaaippu.gov.in இணையதளத்தில் ஆக.30 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Sorry, no posts matched your criteria.