Perambalur

News July 29, 2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 473 மனுக்கள் பெறப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, சார் ஆட்சியர் கோகுல் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News July 29, 2024

ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை வைத்த எம்பி

image

பெரம்பலூர் எம்பி அருண் நேரு, இந்திய இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேற்று நேரில் சந்தித்து பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இரயில் நிலையம் அமைத்து ரயில்வே போக்குவரத்தை மேம்படுத்தும் கோரிக்கை மனுவினை அளித்தார். அந்த மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் இந்த திட்டத்தின் நிதி சாத்தியம் குறித்து மதிப்பீடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

News July 29, 2024

பெரம்பலூர் ஆட்சியரிடம் மாணவர்கள் பரபரப்பு மனு

image

பெரம்பலூர் அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் சம்பளம் ஊதியம் கேட்டு 8வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர்கள் தேர்வு நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் மாணவர்கள் அதிகமாக பாதிக்கப் படுகிறார்கள். இதனை தமிழக அரசு தலையிட்டு உடனடியாக தீர்க்க வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

News July 29, 2024

தீவிர பாதுகாப்பு பணியில் தீயணைப்புத் துறையினர்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும். அன்று பொதுமக்கள் பல்வேறு பிரச்சனைகளுக்காக ஆட்சியரிடம் மனு கொடுத்து தீர்வு காண்பார்கள். அந்த சமயத்தில் சிலர் இடம், சொத்து பிரச்சனை காரணமாக தீக்குளிக்க முயற்சி செய்வார்கள். இதுபோன்ற குற்ற சம்பவங்களை தடுக்க, ஆட்சியர் அலுவலகத்திற்குள் தீயணைப்புத் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

News July 29, 2024

பெரம்பலூரில் சோதனை சாவடிகள் அமைப்பு

image

திருச்சி மத்திய மண்டல காவல்த்துறை தலைவர் ஜி.கார்த்திகேயன் உத்தரவின் படி பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. சியாமளா தேவி தலைமையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 5 இடங்களில் சோதனை சாவடிகள் நேற்று அமைக்கப்பட்டது.இந்த வாகன சோதனையானது, இரவு நேர குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக பெரம்பலூர் எல்லை பகுதிகளான திருமாந்துறை, ஊட்டத்தூர், அடைக்கம்பட்டி, அல்லிநகரம், உடும்பியம் ஆகிய 5 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

News July 28, 2024

பயிா் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

image

பெரம்பலூா் மாவட்டத்தில் காரீப் பருவத்தில் நடவு செய்யப்படும் பயிா்களுக்கு காப்பீடு செய்து கொள்ள மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தியுள்ளாா். அதன்படி சின்ன வெங்காயம் மற்றும் தக்காளிக்கு ஆக.31ஆம் தேதிக்குள்ளும், வாழை, மரவள்ளி போன்ற பயிா்களுக்கு செப்.16ஆம் தேதிக்குள்ளும் அருகிலுள்ள வேளாண் அலுவலகத்தில் ரூ.884 முதல் ரூ.3,601 வரை செலுத்தி பயிா்க் காப்பீடு செய்யலாம் என தெரிவித்துள்ளார். SHARE IT

News July 28, 2024

பெரம்பலூர் சார் ஆட்சியர் ஆலோசனை

image

பெரம்பலூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று சார் ஆட்சியர் கோகுல் தலைமையில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று அரசு மற்றும் கிராம புறங்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பசுமை தூதர், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர், தேசிய பசுமை படை, மாவட்ட வன அலுவலக பிரதிநிதி, இந்தோ அறக்கட்டளை, துளிகள் அறக்கட்டளை என பல அமைப்புகள் பங்கேற்றன.

News July 28, 2024

செட்டிக்குளம் அருகே பணமோசடி வழக்கில் பெண் கைது

image

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 37 நபர்களை நம்ப வைத்து அவர்களின் பேரில் தனியார் நிதி நிறுவனங்களில் 39,10,880 ரூபாயை கடனாக பெற்றுக்கொண்டு ஏமாற்றிய அதேபகுதியைச் சேர்ந்த வசந்தி என்பவரை மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு இன்று அனுப்பி வைத்தனர்.

News July 27, 2024

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடி பெண் கைது

image

பெரம்பலூர், குன்னம் கிராமத்தை சேர்ந்த பொன்மனச்செல்வி என்பவரிடம் பெரம்பலூர் கலைநகரைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைக் கூறி கடந்த 2023 ஆம் ஆண்டு ரூ.15 லட்சம் பெற்றுக் கொண்டு பணத்தை தராமல் ஏமாற்றி வருவதாக கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர், இன்று  முத்துலட்சுமியை கைது செய்தனர்.

News July 27, 2024

பெரம்பலூர் எஸ்.பி தலைமையில் கலந்தாய்வுக்கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி தலைமையில் நிலுவையில் உள்ள நீதிமன்ற பிடி கட்டளைகளை நிறைவேற்றுவது மற்றும் ரவுடிகள் கண்காணிப்பு குழுவின் செயல்பாடுகள் தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. காவல் ஆய்வாளர்கள், ரவுடிகள் கண்காணிப்பு குழு உதவி ஆய்வாளர்கள், நீதிமன்ற காவலர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!