India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
களரம்பட்டி கிராமத்தின் ஏரிக்கரையில் அமைந்துள்ள கோவிலுக்குள் ஒரு தரப்பினர் பட்டியலின மக்களை உள்ளே விட தடை விதித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பட்டியலின மக்கள் இதனை எதிர்ப்பு தெரிவித்து பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன் பின்னர், இரு தரப்பினரையும் அழைத்து வட்டாட்சியர் அலுவலர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
முதியோர் ஓய்வூதிய திட்டம் பெரம்பலூர் கூட்டுறவுத்துறை சார்பில் துறைமங்கலம் நியாயவிலை கடை எண் 1ல் தீபாவளிக்கு முதியோருக்கு இலவச வேஷ்டி, சேலை வழங்கி சிறப்பித்தார் விழாவில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. பிரபாகரன் ஆகியோர் விழாவை தொடங்கி வைத்தனர். விழாவில் துறைமங்கல கிராம முதியோர் மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் பங்கேற்றார்கள்.
செங்கல்பட்டில் இருந்து சிவகாசிக்கு பட்டாசு வாங்க சென்ற நபரை வழிமறித்து ரூ.10லட்சம் வழிப்பறி செய்ததாக போலீசார் நடத்திய விசாரணையில், சந்துரு, அப்துல்,அஜீஸ், கமலக்கண்ணன் ஆகியோரை பிடித்து விசாரித்ததில், ரூ.10 லட்சம் பணம் கொள்ளையடித்தனரா என்று கேட்டபோது, ரூ.1,000 தான் என தெரிவித்துள்ளனர். பின்னர், புகார் அளித்தவரிடம் போலீசார் விசாரித்த போது தவறாக மாத்தி கூறிவிட்டேன் என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு, வரவு-செலவு கூட்டத் தொடரின்போது இன்று (25/10/2024) கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாக கொண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் நகராட்சி, சிப்காட் எறையூர் மற்றும் பாடலூர் தொழிற்பூங்காவிற்கு, ரூ.366.00 கோடி மதிப்பீட்டில் 65,000 மக்கள் பயனடையும் வகையில் கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிவிப்பு வெளியாகியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் நகரத்தின் பல முக்கிய பகுதிகளில் மோப்பநாய் படை பிரிவினர் மற்றும் வெடிகுண்டு கண்டறிந்து அதனை அகற்றும் குழுவினர் ஆகிய இரண்டு குழுவினரும் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், கடைவீதி, நான்குரோடு, பாலக்கரை மற்றும் ஆகிய இடங்களில் மோப்ப நாய்சக்தி (ExplosiveDog) கொண்டு வெடிகுண்டு சோதனை செய்து வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இயற்கை முறையில் சிறப்பாக தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்திடும் விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறையின் சார்பில் முதல் பரிசு 1 லட்சம், 2வது பரிசு 60,000 3வது பரிசு 40,000 வழங்கப்பட உள்ளது. போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள விவசாயிகள் தங்களது விவரத்தினை உழவன் செயலியில் பதிவு செய்து பயன்பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
பெரம்பலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் 21 வது கால்நடை கணக்கெடுப்பு பணி 25.10.2024 முதல் நடைபெற உள்ளது. இதில் மாவட்டத்தில் கணக்கெடுப்பு பணிக்காக வருவாய் கிராமங்களுக்கு 62 கணக்கெடுப்பாளர்கள் (ம) 16 மேற்பார்வையாளர்கள் மூலமாகவும் நகர்புற வார்டுகளில் 8 கணக்கெடுப்பாளர்கள் (ம) 2 மேற்பார்வையாளர்கள் மூலமாகவும் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது என கலெக்டர் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கனமழை காலத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கான ஆயத்தநிலை ஏற்பாடுகளை தோட்டப்பயிர் பயிரிடும் விவசாயிகள் பின்பற்றி பயனடைய வேண்டும். மேலும் அனைத்து வயல்களிலும் பயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்றி விவசாயிகள் தங்கள் தோட்டக்கலை பயிர்களை மழையில் இருந்து பாதுகாத்து கொள்ளுமாறு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தகவல் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிபவர் தமிழக அரசு விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் விருத்தாளர்கள் awards.tn.gov.in என்ற வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தில் விவரங்களை பதிவு செய்து 28.10.2024ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டை சேர்ந்த யுவராஜ் என்ற நபர் சிவகாசிக்கு பட்டாசு கொள்முதல் செய்வதற்காக சென்ற போது, திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் தண்ணீர் பந்தல் அருகே, இருசக்கர வாகனத்தில் வந்த 6 நபர்கள் வழிமறித்து, கத்தியால் தாக்கி 10 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.