Perambalur

News August 1, 2024

கஞ்சா விற்பனை; தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

image

பெரம்பலூர் மாவட்டத்தில் கஞ்சா, போதைப்பொருள் விற்பனை குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த எளம்பலூரை சேர்ந்த ரியாஜ் அகமது (20) என்பவரை போதைப்பொருள் குற்றவாளி என தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க எஸ்பி ஷ்யாம்ளாதேவி நேற்று கலெக்டர் கிரேஸ் பச்சாவுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் அவரை போதைப்பொருள் குற்றவாளி என தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

News August 1, 2024

அரசு அலுவலருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை

image

பெரம்பலூரில் அரசின் நலத்திட்ட உதவித் தொகையை பெறுவதற்காக, பெயரை பரிந்துரை செய்ய ரூ.1,000 லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட சமூகநல விரிவாக்க அலுவலர் காமாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 6,000 அபராதம் விதித்து பெரம்பலூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. மேலும் அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.

News August 1, 2024

இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

image

பெரம்பலூர், எளம்பலூர் சாலையிலுள்ள ஐ.ஓ.பி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் சார்பாக, கிராம பகுதியைச்சேர்ந்த இளைஞர்களுக்கு, இலவச ஏசி, பிரிட்ஜ் பழுது நீக்கும் பயிற்சி வரும் ஆகஸ்ட்.12 முதல் வழங்கப்படவுள்ளது. இதில் 19-45 வயதிற்குட்பட்ட எழுத, படிக்க தெரிந்த நபர்கள் ஆகஸ்ட்.07 மாலை 5 மணிக்குள் ஐ.ஓ.பி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் விண்ணப்பிக்கலாம் என இயக்குநர் ஆனந்தி தெரிவித்துள்ளனர்.

News July 31, 2024

பெரம்பலூர் மாவட்டத்திற்கு புதிய முதன்மை கல்வி அலுவலர்

image

பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலர் அண்ணாதுரை சென்னை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக துணை இயக்குநராகவும், திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் சுகானந்தம் பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) ஜெகநாதன் மயிலாடுதுறை முதன்மை கல்வி அலுவலராகவும், சென்னை பள்ளி கல்வி இயக்குநர் இன்று பதவி உயர்வு வழங்கி பணியமர்த்தியுள்ளார்.

News July 31, 2024

பெரம்பலூரில் வெளுக்கும் மழை

image

தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில், காற்று திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக, பெரம்பலூர் மாவட்டத்தில் இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 31, 2024

மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு முகாம்

image

பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளாதேவி தலைமையில் இன்று சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு மனு முகாமில் கலந்து கொண்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இந்த சிறப்பு மனு முகாம் மூலம் 30 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

News July 31, 2024

அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

image

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், 2-வது நாளாக இன்று (ஜூலை -31), விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு, நோயாளிகள் பயன்படுத்தும் கழிவறைகள் மற்றும் அறைகள் , உள்நோயாளிகளுக்கு தயாரிக்கப்படும் சமையல் கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வுமேற்கொண்டார். அப்போது இணை இயக்குநர் மாரிமுத்து மற்றும் மருத்துவர்கள் பலர் உடனிருந்தனர்.

News July 31, 2024

கிணற்றுக்குள் தவறி விழுந்தவர் மீட்பு

image

பெரம்பலூர் அருகே உள்ள ஆலத்தூர் பகுதியில் கார்த்திகேயன் தந்தை குமரவேல் என்பவர் தனது வீட்டில் பின்புறம் இருந்த கிணற்றில் தடுமாறி கீழே விழுந்தார். பின்னர், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயனைப்பு மீட்பு பணி துறையினர் கிணற்றில் விழுந்த நபரை உயிருடன் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News July 31, 2024

பெண்கள் சாலை மறியல்

image

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட ரெங்கா நகர் பகுதியில் காவிரி குடிநீர் இரண்டு மாதங்களாக வழங்கவில்லை. தண்ணீர் துர்நாற்றத்துடன் வந்ததால் அப்பகுதியில் இருக்கும் பெண்கள், பொதுமக்கள் காலி குடங்களுடன் பெரம்பலூர் துறையூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் நகராட்சி ஆணையர், வண்டி மூலம் தண்ணீர் வழங்குவதாக உறுதியளித்த பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

News July 30, 2024

பொது மக்களுக்கான அடிப்படை சட்ட விழிப்புணர்வு முகாம்

image

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழுவும்,மீரா ஃபவுண்டேஷன் மற்றும் பேரளி ஊராட்சி இணைந்து சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியை இன்று நடத்தியது.மாவட்ட சட்டப் பணிகளின் ஆணையக் குழு தலைவர்  நீதிபதி பல்கீஸ் ஆலோசனைப்படி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சங்கர் தலைமையில் ஆள் கடத்தல், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம், கொத்தடிமைகள் முறை  குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

error: Content is protected !!