Perambalur

News August 4, 2024

பெரம்பலூர் மாற்றுதிறனாளி வீரர் மாரத்தானில் பங்கேற்பு

image

பெரம்பலூர் வட்டம், மேலப்புலியூர் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர் கலைச்செல்வன் மாரத்தானில் பங்கேற்று 3-ஆம் இடம் பிடித்துள்ளார். சென்னையில் ஆகஸ்ட்- 4 இன்று காலையில் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வுக்கான 10 கி.மீ தொலைவுக்கான தமிழ்நாடு மாரத்தான் போட்டி நடைபெற்றது. ‌விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. பிரபாகா் ராஜா விழாவை துவக்கி வைத்தார் .

News August 4, 2024

பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் போலீசார் அபராதம்

image

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாக இருக்கும் இருசக்கர வாகனங்களுக்கு ரோந்து பணியில் இருக்கும் காவலர்கள் அபதாரம் விதித்து வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து நிறுத்தப்பட்டால் வாகனத்தை பறிமுதல் செய்யப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை எடுத்து வருகின்றனர்.

News August 4, 2024

நட்புனா என்னனு தெரியுமா!

image

இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. கிணற்றில் குளித்தது, கிரிக்கெட் ஆடியது, பள்ளிக்கு செல்வதாக கூறி படத்துக்கு போவது என சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நண்பர்களுடன் செய்த சேட்டைகளுன்டு. அந்த வகையில், நீங்க உங்க நண்பனை பற்றி கீழே கமெண்ட் பண்ணுங்க, நண்பனுக்கு சேர் செய்யுங்க.

News August 3, 2024

பயிர் வளர்ப்பு குறித்து ஆட்சியர் ஆய்வு

image

குன்னம் அடுத்த வயலப்பாடி கிராமத்தில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையில் சார்பில் 1.77 இலட்சம் அரசு மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள நிழல் வளைகுடிலில் நாற்றாங்கள் மூலமாக கத்திரி, தக்காளி, மிளகாய் செடி வளர்ப்பு செய்யப்படுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் இன்று ஆய்வு செய்தார்.

News August 3, 2024

பெரம்பலூரில் எட்டாம் ஆண்டு விதைத்திருவிழா

image

பெரம்பலூர் மாவட்ட இயற்கை உழவர்கள் குழு சார்பில் 8ஆம் ஆண்டு விதைத்திருவிழா வருகின்ற (11.08.2024) காலை-9 மணியளவில், ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதில், பாரம்பரிய நெல் விதைகள், காய்கறி விதைகள், சிறுதானிய விதைகள், இயற்கை உணவுகள், மற்றும் நூல்கள் உள்ளிட்ட ஏராளமானவைகள் அணிவகுக்கப்படவுள்ளன.

News August 2, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள், நவீன முறை சலவையகம் அமைக்க தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க 10 நபர்கள் கொண்ட ஒரு குழுவாக செயல்பட வேண்டும். இத்திட்டம் மூலம் பயன்பெற விரும்புபவர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் இன்று தெரிவித்துள்ளார்.

News August 2, 2024

பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (ஆக -02) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி ‘கல்வியும் காவலும்’ என்ற மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பொறுப்பு அதிகாரிகளின் தலைமையில் நடைபெற்றது. மாணவ மாணவிகளிடம் போதை பொருட்கள் உபயோகிப்பதால் ஏற்படும் விளைவுகள் மற்றும் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டன.

News August 2, 2024

பெரம்பலூரில் 108 குத்து விளக்குகள்  பூஜை

image

பெரம்பலூர் நகர் பகுதியின் கடைவீதியில் அமைந்துள்ள ஸ்ரீரேணுகாஅம்பாள் ஆலயத்தில் 108 சுமங்கலிகள் ஒன்றிணைந்து ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்குபூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர், குரும்பலூர், பாளையம், அரனாரை, துறைமங்கலம் நான்கு ரோடு உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு சிறப்பு வழிபாடு செய்தனர்.

News August 2, 2024

குன்னம் அரசு பள்ளியில் கலெக்டர் ஆய்வு

image

குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில், மாணவர்களின் கற்றல் திறன், பள்ளிகளின் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை பார்வையிட்ட கலெக்டர் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து அவர்களிடம் கலந்துரையாடினார். இந்நிகழ்வின் போது அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News August 2, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைப்பதற்கு தேவையான இயந்திரங்கள் மூலப்பொருட்களுக்கு ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்புபவர்கள் ஆட்சியரகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகுமாறு ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று தெரிவித்தார்.

error: Content is protected !!