Perambalur

News August 5, 2024

பெரம்பலூரில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

image

பெரம்பலூர் மாவட்ட காவல் துறை சார்பில் பெரம்பலூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளிடையே பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில் குழந்தை திருமணம், போக்சோ சட்டம், கல்வியின் முக்கியத்தும், பெண்கல்வியின் அவசியம், பள்ளியில் இடைநின்ற மாணவ மாணவிகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.

News August 5, 2024

பெரம்பலூர் சிறுவாச்சூர் அருகே கோர விபத்து

image

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அடுத்த மலையப்ப நகர் அருகே இன்று அதிகாலை 4 மணி அளவில் முன்னே சென்ற டேங்கர் தண்ணீர் லாரி மீது சென்னையிலிருந்து நாட்டரசன் கோட்டைக்கு சென்ற தனியார் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இது குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 5, 2024

பெரம்பலூர் ஆட்சியர் 10-நிமிடத்தில் செய்த செயல் 

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்த பத்தே நிமிடத்தில், வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட அய்யர்பாளையம் கிராமத்தை சேர்ந்த நாகராஜ் என்ற M.Com பட்டதாரி மாற்றுத்திறனாளி நபருக்கு மூன்று சக்கர வண்டியை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் வழங்கினார்.

News August 5, 2024

பெரம்பலூரில் குறவர்இன மக்கள் ஆட்சியரிடம் மனு 

image

பெரம்பலூர் நகர பகுதியில் உள்ள புதிய மதன கோபாலபுரம் பகுதியில் மலைக்குறவன் இன மக்கள் வசித்து வருகின்றனர். சாலை விரிவாக்கம் பணி மேற்கொள்ளும் போது தங்களது இன மக்களுக்கு புதிய இடம் எளம்பலூர், காந்தி நகரில் ஒதுக்கப்பட்டது. எங்களுக்கு கலைஞர் கனவு திட்டம் மூலம் வீடு ஒதுக்கீடு  செய்யுமாறு இன்று மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ்விடம் பகுதி மக்கள் மனு கொடுத்தனர்.

News August 5, 2024

பெரம்பலூரில் “மக்களைத்தேடி மருத்துவம்” 4-ஆண்டு துவக்கவிழா

image

பெரம்பலூர் மாவட்ட பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துதுறை சார்பாக மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் 4-ஆம் ஆண்டு துவக்கவிழா இன்று (05.08.2024) பெரம்பலூர் தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இணை இயக்குநர் மாரிமுத்து, மாவட்ட சுகாதார அலுவலர் பிரதாப்குமார்,மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

News August 5, 2024

பெரம்பலூரில் பலத்த மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று பெரம்பலூரில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று மற்றும் நாளை 30 முதல் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 5, 2024

பெரம்பலூர் மாவட்டத்தில் 176 மி.மீ. மழை

image

பெரம்பலூர் மாவட்ட சுற்றுப் பகுதியில், நேற்று மழை பெய்தது. அதன்படி பெரம்பலூர் கிருஷ்ணாபுரம், வி.களத்தூர், வேப்பந்தட்டை, அகரம்சீகூர், லப்பைகுடிகாடு, பாடாலூர், செட்டிகுளம் ஆகிய பகுதிகளில் மழை பெய்துள்ளது. அதன்படி மாவட்டத்தின் மொத்தம் 176 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் சராசரியாக 16 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News August 4, 2024

பெரம்பலூர் தேமுதிக பொறுப்பாளர்களுக்கு சான்றிதழ்

image

பெரம்பலூர் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகிகளுக்கு புதிய பொறுப்பு அறிவித்து பொறுப்பாளர்களுக்கு இன்று மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட கழகச் செயலாளர் துரை சிவா ஐயப்பன் மாவட்ட கழகத்தின் சார்பாக சான்றிதழை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்வில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகிகள் பலர் உடன் பங்கேற்றனர்.

News August 4, 2024

பெரம்பலூரில் பலத்த மழைக்கு வாய்ப்பு

image

தமிழத்தில் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்ய வாப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இடை இடையே 30 கிலோ மீட்டர் முதல் 40 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News August 4, 2024

பெரம்பலூரில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்த காதல் ஜோடி

image

பெரம்பலூர் எசனை கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் தினகரன் பட்டதாரி இளைஞர். இவர் கோயம்புத்தூரில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தபோது மதுரையைச் சார்ந்த பவித்ரா என்பவருடன் காதல் ஏற்பட்டது. காதல் விவகாரம் வீட்டுக்கு தெரியவே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று ஸ்ரீரங்கத்தில் திருமணம் செய்து கொண்டு பெரம்பலூர் மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

error: Content is protected !!