Perambalur

News November 19, 2024

பெரம்பலூரில் 306 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நேற்று (18.11.2024) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டார். இந்த கூட்டத்தில் 306 மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. பல்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

News November 18, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

“உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாம் பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் 20.11.2024 அன்று நடைபெறவுள்ளது. எனவே கிராம பொதுமக்கள் தங்கள் கிராமத்திற்கு ஆய்வுகள் மேற்கொள்ள வரும் மாவட்ட நிலை அலுவலரிடம் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் (ம) தங்கள் கிராமத்திற்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளையும் மனுக்களாக அளித்து பயன்பெறுமாறு கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

News November 18, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் 01.01.2000க்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக்கும் 01.01.2000க்கு பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறந்த பதிவுகளுக்கும், குழந்தை பெயர் வைத்து பிறப்பு சான்று பெற 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ள நகராட்சி அல்லது வட்டாட்சியர், பேரூராட்சி அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் என பெரம்பலூர் கலெக்டர் அறிவித்துள்ளார். SHARE IT.

News November 17, 2024

பெரம்பலூர் மாவட்டத்தில் 102 மில்லி மீட்டர் மழை பதிவு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்றைய மழை நிலவரப்படி பெரம்பலூர் 11 மி.மீ, எறையூர் 2 மி.மீ, கிருஷ்ணாபுரம் 5 மி.மீ, வி.களத்தூர் 9 மி.மீ, தழுதாழை 18 மி.மீ, வேப்பந்தட்டை 30 மி.மீ, அகரம்சீகூர் 5 மி.மீ, பாடாலூர் 9 மி.மீ, செட்டிகுளம் 11 மி.மீ. மழை பெய்துள்ளது. இதன் மொத்த அளவு 102 மி.மீ மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 9.27 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இன்று தகவல் வெளியிடப்பட்டது.

News November 17, 2024

மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் 19.11.2024 அன்று மாலை 4.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள் என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.

News November 17, 2024

சிறந்த பள்ளிக்கான விருது பெற்ற ஆசிரியர்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் சிறந்த பள்ளிக்கான கேடயத்தினை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சீராநத்தம் ஊ. ஒ. தொ.பள்ளி தலைமை ஆசிரியர் திருமாவளவன், உதவி ஆசிரியர் ராமசாமி, ஆலத்தூர் வட்டார கல்வி அலுவலர் சின்னசாமி ஆகியோரிடம் வழங்கினார். பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் விருது பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த சீராநத்தம் பள்ளி ஆசிரியர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.

News November 17, 2024

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை மின்தடை

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எசனை, வேப்பந்தட்டை, கிருஷ்ணாபுரம் பகுதிகளில் நாளை மறுநாளும், குரும்பலூர், லாடபுரம், அதன் சுற்றுவட்டார பகுதிகளான அம்மாபாளையம், அடைக்கம்பட்டி, களரம்பட்டி, மங்கூன், நக்கசேலம், குரூர் ஆகிய பகுதிகளில் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சார விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் தகவல் அளித்துள்ளார். ஷேர் செய்யவும்

News November 16, 2024

பெரம்பலூர்: 29 கிலோ குட்கா பொருள் சிக்கியது

image

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலப்புலியூர் கிராமத்தில் சுப்பிரமணியன் மகன் சக்திவேல் என்பவர் தனக்கு சொந்தமான மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட 29 கிலோ கொண்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்பனை செய்த நிலையில் தனிப்படையினர் சிறப்பு உதவி ஆய்வாளர் சிவக்குமார், ரமேஷ் மற்றும் அவரது குழுவினர் அதிரடியாக சோதனை செய்து அவற்றை பறிமுதல் செய்து சக்திவேல் என்பவரை கைது செய்தனர்.

News November 16, 2024

பெரம்பலூர் : 94 பயனாளிகளுக்கு ரூ.3.05 கோடி  கடன் உதவி

image

பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவுத் துறையின் சார்பில் நடத்தப்பட்ட 71வது அகில இந்திய கூட்டுறவு வார விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் 94 பயனாளிகளுக்கு டாம்கோ கடன், பயிர்கடன், விவசாய நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழுக்கடன் என ரூ.3.05 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு கடன் உதவிகளையும், சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு விருதுகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் இன்று வழங்கினார்.

News November 16, 2024

ஆலத்தூர் அருகே விபத்து: 20 பேர் படுகாயம்

image

பண்ருட்டியைச் சேர்ந்த 25 பேர் திருச்செந்தூர் நோக்கி வேனில் பயணம் செய்துள்ளனர். இன்று அதிகாலை 4:30 மணியளவில் பெரம்பலூரை அடுத்த ஆலத்தூர் என்ற இடத்தில் வேன் முன் சென்ற லாரி மீது எதிர்பாரத விதமாக மோதியதில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் 5 பேர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக் குறித்து பாடாலூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.