Tamilnadu

News August 16, 2025

நாய்க்கடி தடுப்பூசி போட்டாலும் சிகிச்சை அவசியம்

image

கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை விழுப்புரத்தில் 7936 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கும் நிலையில்நாய்க்கடி தடுப்பூசி போட்டாலும் சிகிச்சை அவசியம் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. விலங்குகளின் உமிழ்நீர் மூலம் பரவும் கொடிய நோயான ரேபிஸ் தற்போது அதிகமாக பரவி வருவதால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற்றால் ராபிஸ் பாதிப்பை தடுக்கலாம் என்று கூறுகின்றனர்

News August 16, 2025

ராணிப்பேட்டை: இலவச 5G பயிற்சி; ரூ.4.5 லட்சம் வரை சம்பளம்

image

ராணிப்பேட்டை மக்களே, தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் 5G Communication Technology சான்றிதழ் படிப்பை இலவசமாக வழங்குகிறது. 70% நேரடி வகுப்பிலும், 30% ஆன்லைன் வழியாகவும் பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியின் மூலம் முன்னணி நிறுவனங்களின் பணி வாய்ப்பை பெறும் இளைஞர்களுக்கு வருடம் ரூ.4.5 லட்சம் சம்பளம் கிடைக்கும். 18 முதல் 35 வயது உடையவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு. ஷேர் பண்ணுங்க.

News August 16, 2025

கோவையில் நீங்களும் ஒரு பேக்கரி ஓனராகலாம்!

image

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வரும் ஆக.19, 20 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இப்பயிற்சி சிறு தொழில் முனைவோருக்கு தங்களது வருமானத்தை பெருக்க பெரும் உதவியாக இருக்கும். பயிற்சியில் ரொட்டி வகைகள், கேக் மற்றும் பிஸ்கட், பப்ஸ் வகைகள் தயாரிக்க தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்பட உள்ளது. விபரங்களுக்கு: 94885 18268 என்ற எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News August 16, 2025

செங்கல்பட்டு: இலவச 5G பயிற்சி; ரூ.4.5 லட்சம் வரை சம்பளம்

image

செங்கல்பட்டு மக்களே தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் 5G Communication Technology சான்றிதழ் படிப்பை இலவசமாக வழங்குகிறது. 70% நேரடி வகுப்பிலும், 30% ஆன்லைன் வழியாகவும் பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியின் மூலம் முன்னணி நிறுவனங்களின் பணி வாய்ப்பை பெறும் இளைஞர்களுக்கு வருடம் ரூ.4.5 லட்சம் சம்பளம் கிடைக்கும். 18 முதல் 35 வயது உடையவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு. ஷேர் பண்ணுங்க

News August 16, 2025

தூத்துக்குடி: ரூ.96,000 ஊதியத்தில் வேலை

image

தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி என்ற பொதுத்துறை நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 550 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு இளங்கலை முடித்திருந்தால் போதும். இதற்கு மதுரை, குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும். இதில் ரூ.50,925 முதல் ரூ.96,765 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து <<>>ஆக.30க்குள் விண்ணப்பிக்கவும்.

News August 16, 2025

இயில்வே அமைச்சருக்கு மதுரை எம்.பி. கடிதம்

image

இரயில்வே அமைச்சருக்கு மதுரை எம்.பி எழுதிய கடிதத்தில்; “தென்னக ரயில்வே இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வுத் தேர்வில் மாநில மொழி உள்ளிட்ட 3 மொழிகளில் கேள்வித்தாள் தரப்பட வேண்டுமென்பது விதி. ஆனால் தமிழ் கேள்வித்தாள் இல்லாமல் தேர்வு நடைபெற்றுள்ளது. இந்தித் திணிப்பும் தமிழ் ஒழிப்புமே இரயில்வேயின் இரட்டை தண்டவாளங்களாக இருக்கிறது. தமிழ் கேள்வித்தாளுடன் மறு தேர்வு நடத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

News August 16, 2025

லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் ரோப் கார் சேவை நிறுத்தம்

image

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் கம்பி வட ஊர்தி (ரோப் கார்) சேவை இரண்டு நாட்களுக்கு நிறுத்தம் செய்யப்படுகிறது. ஆகஸ்ட் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிந்த பின், மீண்டும் வழக்கம் போல் சேவை செயல்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது பக்தர்களின் வசதிக்காக மேற்கொள்ளப்படும் ஒரு தற்காலிக நிறுத்தம் ஆகும்.

News August 16, 2025

JUST IN நெல்லையில் சுற்றுலா பயணி பலி

image

அம்பை அருகே ஆலடியூர் நதியுண்ணி கால்வாய் பகுதிக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து குடும்பத்தினருடன் சுற்றுலா வந்த பொன் சூரியன் என்பவர் குளிக்கும் போது மூச்சுத்திணறி தண்ணீரில் மூழ்கினார். வாலிபரை தேடும் பணியில் சேரன்மகாதேவி மற்றும் அம்பை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவரது சடலத்தை மீட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

News August 16, 2025

ஆயுதப்படை காவலர்களுக்கான குறை தீர்வு கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று ஆயுதப்படை காவலர்களுக்கான குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் காவலர்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். 58 பேர் மனுக்கள் கொடுத்தனர். இதில் பணியிட மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுவாக அளிக்கப்பட்டது.

News August 16, 2025

சென்னையின் முதல் ரயில்வே ஸ்டேஷன்

image

தென்னிந்தியாவின் முதல் ரயில்நிலையம் நம்ம வடசென்னை ராயபுரத்தில் தான் அமைக்கப்பட்டது. 1856ம் ஆண்டு கட்டப்பட்ட ராயபுரம் ரயில்நிலையத்தில் இருந்து முதல் ரயில் வாலாஜா பேட்டை வரை இயக்கப்பட்டது. இன்றைய வளர்ச்சி அடைந்த சென்னையின் முக்கிய ரயில் நிலையங்களாக சென்ட்ரல், எழும்பூர் உள்ள நிலையில், இந்தியாவின் பழமை வாய்ந்த ரயில் நிலையமாக ராயபுரம் உள்ளது. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!