Tamilnadu

News August 17, 2025

தீபாவளி பரிசை எதிர்நோக்கியுள்ள பட்டாசு நகரம்

image

சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி தீபாவளிக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பல்வேறு வணிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பட்டாசு, அச்சகத்திற்கு பெயர் பெற்ற சிவகாசியில் உள்ள தொழிலதிபர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் வரி குறைப்பு முறை எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

News August 17, 2025

மறைந்த இல உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அமைதி பேரணி

image

மயிலாடுதுறையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. நகராட்சி பூங்கா அருகில் இருந்து அமைதி பேரணி நடைபெற்றது. பேரணியில் பங்கேற்றவர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி வர மயிலாடுதுறை பேருந்து நிலையம் வரை பேரணி நடைபெற்றது.தொடர்ந்து இல கணேசன் திருவுருவப்படத்திற்கு பாரதிய ஜனதா கட்சியினர் மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர்.

News August 17, 2025

திருச்சி: மருங்காபுரியில் லாட்டரி விற்றவர் கைது

image

திருச்சி மாவட்டம் மருங்காபுரியை அடுத்த வளநாடு போலிசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். அப்போது மருங்காபுரி நடுத்தெருவில் அதே பகுதியை சேர்ந்த மதிவாணன் (46) என்பவர் லாட்டரி விற்ற போது கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரிடமிருந்து ரொக்கம் ரூ.14000 மற்றும் லாட்டரி எண்கள் குறிக்கப்பட்ட ஒரு பேப்பர் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

News August 17, 2025

தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட். 16) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 17, 2025

சேலத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும்!

image

“சேலத்தில் சிறைத் தியாகிகள் நினைவாக ஒரு மணிமண்டபம் விரைவில் அமைக்கப்படும்; முத்தரசன் வைத்த கோரிக்கையைத் தட்டிக் கழிக்க முடியுமா?” என சேலம் மாநகர், நேரு கலையரங்கத்தில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-வது மாநில மாநாட்டில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ளார்.

News August 17, 2025

புதுக்கோட்டை இரவு நேர ரோந்து பணி போலீசார் விபரம்  

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 16) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. தேவையுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம். அல்லது 100ஐ அழைக்கலாம். மற்றவர்களுக்கும் இந்த தகவலை ஷேர் செய்யுங்கள்!

News August 16, 2025

சேலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

image

சேலத்தில் 2-வது நாளாக இன்று நடைபெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26- வது மாநில மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கொள்கை உறவு ஆழத்தை தலைமுறைகள் கடந்தும் சொல்ல வேண்டும். திராவிட இயக்கத்துக்கும், பொதுவுடமை இயக்கத்துக்கும் கொள்கை நட்பு உள்ளது. அண்ணன் முத்தரசன் கேட்டு நான் எதையும் தட்டி கழித்தது கிடையாது” என்றார்.

News August 16, 2025

ராமநாதபுரம்: இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரம்

image

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை, சார்பில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கமுதி, பரமக்குடி, ராமேஸ்வரம், முதுகுளத்தூர் உட்கோட்டத்தில் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளனர். இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்கு, பொதுமக்கள் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் மூலம் காவல்துறையை தொடர்புகொண்டு உதவி பெறலாம்.

News August 16, 2025

நெல்லை: இன்று இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

image

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று(ஆக.16) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

News August 16, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஆகஸ்ட்.16) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

error: Content is protected !!