Tamilnadu

News August 17, 2025

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று (ஆக16) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.

News August 17, 2025

வேலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

வேலூர் மாவட்டத்தில் இன்று (ஆக.16) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். (ஷேர் பண்ணுங்க)

News August 17, 2025

திருவண்ணாமலை இரவு ரோந்து அதிகாரிகளின் விவரங்கள்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இரவு 16/08/2025 10 மணி முதல் 17/08/2025 காலை 06 மணி வரை இரவு ரோந்துக்கு தாலுக்கா வாரியாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்கள் மற்றும் தொலைபேசி எண்கள் மேலே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. அவசர காலத்தில் உங்கள் தாலுக்கா அதிகாரி அழைக்கலாம் மற்றும் 100 அழைக்கலாம் என மாவட்ட காவல் அலுவலகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது…

News August 17, 2025

சேலம் ரயில் பயணிகளின் கவனத்திற்கு!

image

சேலம் வழியாக இயக்கப்படும் தாம்பரம்- மங்களூரு சென்ட்ரல் (16159), பாட்னா-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (22644), திப்ரூகர்-கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் (22504), ஆலப்புழா- தன்பாத் எக்ஸ்பிரஸ் (13352), எர்ணாகுளம்-கேஎஸ்ஆர் பெங்களூரு எக்ஸ்பிரஸ் (12678) ஆகிய ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதால் நாளை (ஆக.17) கோவை ரயில் நிலையத்திற்கு செல்லாது. எனினும் போத்தனூர் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும்.

News August 17, 2025

சேலம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

image

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் வங்கி தொடர்பான மோசடிகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாருக்கும் OTP, PIN எண், CVV மற்றும் கார்டு எண்ணை எந்தச் சூழலிலும் பகிர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கிகள் இத்தகவல்களை ஒருபோதும் கேட்காது. வலுவான கடவுச்சொற்களை பயன்படுத்துங்கள். ஆன்லைன் நிதி மோசடிகள் தொடர்பான புகார்களுக்கு 1930 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது .

News August 17, 2025

முதல்வர் விளையாட்டு போட்டி விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

image

நெல்லை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சக்கரவர்த்தி நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: 2025-26 முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க ஆன்லைன் விண்ணப்பத்திற்கு ஆகஸ்ட் 20, மாலை 6 மணி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகியோர் https://cmtrophy.sdat.in அல்லது https://sdat.tn.gov.inல் விண்ணப்பியுங்க.

News August 17, 2025

இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (ஆக.16) இரவு முதல் இன்று (ஆக.17) காலை வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு 100 ஐ டயல் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News August 17, 2025

புதுச்சேரியில் வழக்கத்தை விட அதிகமான சுற்றுலா பயணிகள்

image

சுற்றுலா பயணிகள் விரும்பும் பட்டியலில் உலகிலேயே புதுச்சேரி 2-ம் இடத்தை பிடித்துள்ளது. சுதந்திர தினத்தையொட்டி தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் கன மழை பெய்கிறது. இதனால் அங்குள்ள சுற்றுலா தளங்களுக்கு செல்ல முடியாத நிலை இதனால் புதுச்சேரியில் வழக்கத்தை விட இன்று அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

News August 17, 2025

இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (ஆக.16) இரவு முதல் இன்று (ஆக.17) காலை வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு 100 ஐ டயல் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News August 17, 2025

தர்மபுரியில் இன்று முதல்வர் பங்கேற்கவுள்ள நிகழ்சிகள்

image

தர்மபுரி மாவட்டத்தில் இன்று (ஆக.17) முதலமைச்சர் முரசொலி மாறன் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளார், அதனை தொடர்ந்து விவசாயிகளுக்கு இ-கிஷான் கார்டு, ரூ.1,718 கோடியில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார் அங்கிருந்து சாலை மார்கமாக விமான நிலையம் செல்ல உள்ளார்.

error: Content is protected !!