Tamilnadu

News March 18, 2024

சென்னை: இனி அந்த பக்கம் போகாதீங்க..!

image

சென்னை: பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் குறளகம் கட்டிடத்திற்கு அருகில் அதிநவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த மல்டி மாடல் பேருந்து நிலையம் மற்றும் அலுவலக வளாகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிராட்வே பேருந்து நிலையத்தை இடிக்கும் பணிகள் தொடங்க உள்ளன. இந்த திட்டம் ரூ.823 கோடியில் மேம்படுத்தப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

News March 18, 2024

காஞ்சிபுரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்களுக்கான ஆலோசனை கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடாளுமன்ற தேரதலுக்கு 1417வாக்குச் சாவடி மையங்களும், அதில் 178 பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. அம்மையங்களில் வாக்குப்பதிவின் போது நேரலை வீடியோ பதிவு செய்யப்படும் என்றார்.

News March 18, 2024

சேலம் விமான நிலையம்: வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு

image

பாரதிய ஜனதா கட்சி பிரச்சாரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி, இன்று சேலம் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள 5 கி.மீ. தூரத்திற்கு வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வுச் செய்தனர். அதேபோல், ஓமலூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளிலும் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

News March 18, 2024

சேலம்: 30 இடங்களில் கண்காணிப்பு கேமரா!

image

2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மார்ச் 20ம் தேதி வேட்பு மனு தாக்கல் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தலில் போட்டியிடுபவர்கள் அதிகம் பேர் வந்து செல்வர். இதனால் பாதுகாப்பு கருதி கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் உள்பட கலெக்டர் அலுவலகம் முழுவதும் 30 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

News March 18, 2024

மதுரை அருகே 7 பேர் மீது வழக்கு

image

மேலூர் அருகே கரையிப்பட்டியில் உள்ள ஒரு கோவிலின் பூசாரியாக உள்ளவர் சின்னையா. அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித் மது போதையில் நேற்று அவரிடம் தகராறில் ஈடுபட்டார். இதை சின்னையாவின் மருமகன் சிவா தட்டி கேட்க, அவரை பீர் பாட்டிலால் ரஞ்சித் தலையில் தாக்கி மண்டையை உடைத்தார். இது தொடர்பாக ரஞ்சித், சுமதி, கார்த்திகா உட்பட 7 பேர் மீது கீழவளவு போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News March 18, 2024

திருப்பூர் தொகுதி வேட்பாளர் அறிவிப்பு..!

image

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 19 ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கே.சுப்பராயன் மறுபடியும் அந்த தொகுதியின் வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளார்.

News March 18, 2024

நாமக்கல்லில் பணம் பரிமாற்றம்.. நடவடிக்கை

image

நாமக்கல் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(மார்ச்.18) மாவட்ட தேர்தல் அலுவலர் மருத்துவர் ச.உமா தலைமையில் பாராளுமன்ற தேர்தல் 24 முன்னிட்டு வங்கி ஊழியர்களிடம் தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் பேசும்போது, வங்கிக் கணக்கில் சந்தேகத்திற்குரிய வகையில் பணம் பரிமாற்றம் நடந்தால் உடனே தெரிவிக்க வேண்டும் என கூறினார்.

News March 18, 2024

கரூர்: ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட பணம் பறிமுதல்

image

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேட்டமங்கலம் ராசம்மாள் கல்வி நிறுவனம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் இன்று ஈடுபட்டுள்ளனர். அப்போது, ஈச்சர் வேனில் உரிய ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட ரூ.1,47,620 பணம் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜூஸ் கம்பெனி ஊழியர் பிரகாஷ் என்பவரிடம் பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

News March 18, 2024

கடலூர்: பேருந்து சக்கரத்தில் பாய்ந்து ஒருவர் பலி

image

கடலூர், திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்தில் இன்று(மார்ச்.18) அதிகாலை 50 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் சென்னை புறப்பட தயாரான அரசு பேருந்தின் பின் சக்கரத்தில் திடீரென பாய்ந்து விழுந்ததில் அவரது தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட மனநலம் பாதிக்கப்பட்டவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

News March 18, 2024

கோவை அருகே மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் 

image

கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள அல்வேர்னியா மெட்ரிக் பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று மிரட்டல் விடுத்த மர்மநபர் போன் இணைப்பை துண்டித்துள்ளார். இதனையடுத்து, பள்ளியில் போலீசார் குவிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் மோடி இன்று மாலை கோவையில் “ரோடு ஷோ” நடத்த உள்ள நிலையில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!