India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் நகரில் சடைய படையாட்சி தெருவை சேர்ந்தவர் ராமசாமி, வளர்மதி தம்பதியினர். இவர்களின் மகன் இளமதி இவர் குடிக்க அடிக்கடி பணம் கேட்டு தாய் ,தந்தையை தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.இதனால் மனம் வெறுத்து போன தம்பதியினர் வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை நேற்று குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.இதுகுறித்து அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விராலிமலை தனியார் பள்ளி பின்புறம் உள்ள குளக்கரையில் இருந்த செடி, கொடிகள் இன்று காலை (மார்ச்.16) தீப்பிடித்து எரிந்தது.இதனை கண்ட அப்பகுதியினர் இதுகுறித்து இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அனைத்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து கோழி ஏற்றிக்கொண்டு விருத்தாசலம் நோக்கி இன்று(மார்ச்.16) மினிலாரி ஒன்று வந்தது. வேப்பூர்-விருத்தாசலம் நெடுஞ்சாலையில் வந்தபோது சாலையோரம் நின்ற லாரி மீது, மினி லாரி மோதியதில் காங்கேயத்தை சேர்ந்த லாரி டிரைவர் ஞானப்பிரகாசம்(25), என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி மக்களவை தொகுதிக்கு ஏப்.19ம் தேதி தேர்தல் நடக்கும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் மார்ச்.20ம் தேதி தொடங்கும் எனக் கூறியுள்ள ஆணையம், வேட்புமனு தாக்கல் நிறைவு மார்ச்.27 என்றும், வேட்புமனு திரும்பப் பெற கடைசி தேதி மார்ச்.30 என்றும் கூறியுள்ளது. வேட்புமனு பரிசீலனை மார்ச்.28ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜீன்.4ம் தேதியும் நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை காலம் தொடங்கிவிட்டதால், தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டி வன சரக்கத்திற்கு உட்பட்ட பகுதி வறண்டு காணப்படுகிறது. எனவே வன சாலைகளை பயன்படுத்துவோர் தீப்பற்ற கூடிய பொருட்கள் மற்றும் பீடி, சிகரெட் போன்ற பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம். மேலும் காட்டிற்குள் தீ வைக்கும் நபர்களை வனத்துறையில் பிடித்துக் கொடுத்தாலோ அல்லது தகவல் கொடுத்தாலோ தக்க சன்மானம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு ஏப்.19ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. விளவங்கோட்டில் காங். எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி பாஜகவில் இணைந்த நிலையில் அந்த தொகுதி காலியானது. இந்நிலையில், தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் நடைபெறும் ஏப்.19 தேதியே விளவங்கோடு தொகுதிக்கும் இடைத்தேர்லை நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் இன்று தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையம் இன்று வருகை தந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக புறநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில் உற்சாக வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டனர் முன்னாள் அமைச்சர் என் ஆர் சிவபதி மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் மாரியம்மன் கோயில் ஊராட்சி புளியந்தோப்பு பகுதியில் நீர்வளத்துறை சார்பில், சமுத்திரம் ஏரியில் ரூ.8.84 கோடி மதிப்பில் புதிதாக சிறுவர் பூங்கா கட்டப்பட்டுள்ளது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (16.03.2024) திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் , சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 33வது வார்டுக்குட்பட்ட தொழிலாளர் நல அலுவலக வளாகத்தில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைத்தல் மற்றும் தொல்லவிளை பாரதியார் தெருவில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைத்தல் ஆகிய பணிகள் இன்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
அரக்கோணம் அடுத்த தக்கோலம் நகரி குப்பத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை மையம் இயங்கி வருகிறது. இங்கு கட்டட இடிபாடுகளில் சிக்குபவர்களை மீட்பதற்கு 10 மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மோப்ப நாய்களின் மோப்ப பயிற்சி மற்றும் அடிப்படை செயல்திறன் பயிற்சி இன்று நடைபெற்றது. கமாண்டன்ட் சைலேந்திரசிங், துணை கமாண்டன்ட் கோரக்சிங் ஆகியோர் பயிற்சியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
Sorry, no posts matched your criteria.