Tamilnadu

News May 3, 2024

அரூர்: மது விற்ற வழக்கில் 87 பேர் கைது

image

அரூர் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் வசந்தா
தலைமையிலான போலீசார் கடந்த மாதம் முழுவதும் அரூர் கோட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். இதில் சாராயம், மதுபாட்டில்களை கள்ளத்தனமாக அதிக விலைக்குவிற்ற வழக்கில் 12 பெண்கள் உள்பட 87 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 1,869 மதுபாட்டில்கள், 110 லிட்டர் சாராயம், 900 லிட்டர் சாராய ஊறல் 3 டூவிலர் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

News May 3, 2024

சேலம்: கஞ்சா விற்ற கல்லூரி மாணவர்! 3 பேர் கைது

image

சேலத்திற்கு கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தாதாகப்பட்டியை சேர்ந்த சிவசுப்பிரமணியம்(33), கல்லூரி மாணவர் ஹரிகிருஷ்ணன்(21), சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த சதீஸ்(23) ஆகியோர் ஒடிசாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து சேலத்தில் விற்பனை செய்ததை கண்டுபிடித்தனர். 3 பேரையும் கைது விசாரித்து வருகின்றனர்.

News May 3, 2024

162 நிறுவனம் மீது நடவடிக்கை

image

தேசிய விடுமுறை நாளான மே தினத்தன்று அனைத்து தொழிலாளர்களுக்கும் விடுமுறை வழங்க வேண்டும் என்று தொழிலாளர் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது கோவையில் மே தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 78 உணவு நிறுவனங்கள் உள்பட 162 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் இன்று (மே.03) தெரிவித்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது

News May 3, 2024

கஞ்சா விற்ற 4 பேர் கைது

image

திருப்பத்தூர் டவுன் போலீசார் நேற்று பேருந்து நிலைய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜெகதீஸ் (24), திருப்பத்தூர் தண்ணீர்பந்தல் சரவணன்(35), சின்ன உடைய முத்துரை சேர்ந்த ஜவகர் (24). வெங்கடசமுத்திரத்தை சேர்ந்த நித்திஷ் (21) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 3, 2024

சிவகங்கை மாவட்டத்தில் 40 நிறுவனங்களின் மீது மதுரை தொழிலாளர் துறை நடவடிக்கை

image

சிவகங்கை மாவட்டத்தில் மே தினத்தன்று கடைகள்,உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவன ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.வேலை செய்ய அனுமதிக்க வேண்டுமெனில் 2சம்பளம் அல்லது மாற்று விடுப்பு அளிக்க வேண்டும்.பணியில் ஈடுபடுத்த விடுமுறை தினத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் படிவம் பெற வேண்டும் இதில் சிவகங்கை மாவட்டத்தில் 40 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

News May 3, 2024

புதுச்சேரியில் 5000 மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ளனர்

image

நாடு முழுவதும் வரும் 5ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் புதுச்சேரியில் 11 மையங்களில் நடக்கும் நீட் தேர்வினை 5 ஆயிரம் மாணவர்கள் எழுத உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்தாண்டு புதுச்சேரி தேர்வு மைய நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்தந்த மாநில மாணவர்கள் அந்தந்த மாநிலங்களில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News May 3, 2024

குடிநீர் தட்டுப்பாடு: கட்டுப்பாட்டு எண் அறிவிப்பு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் கோடைகால நோய் பாதிப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு மற்றும் மருத்துவ ஆலோசனை பெற 104 என்ற எண்ணை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம் என மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனை வராமல் கண்காணிக்கப்படுகிறது. குடிநீர் தொடர்பான புகார்கள் ஏதும் இருந்தால் “வணக்கம் நெல்லை” கட்டுப்பாட்டு அறை எண் 9786566111 என்ற கைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

News May 3, 2024

மதுரையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு பதிவான அதிகபட்ச வெப்பநிலை

image

மதுரையில் நேற்று ( வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்தது. மதுரை மாவட்டத்தின் வெப்ப நிலை, அதிகபட்சமாக 107.6 டிகிரி பாரன்ஹீட் டாக ( 42 டிகிரி செல்சியஸ்) பதிவானது. கடந்த 2019ம் ஆண்டு மே 29ந் தேதி மதுரையில் 42 டிகிரி செல்சியஸ் பதிவான நிலையில், 4 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று அதே அளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது.

News May 3, 2024

சென்னை: ஒரே நாளில் 471 வழக்குகள் பதிவு!

image

சென்னையில், வாகன நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடை நேற்று(மே 2) முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து சென்னையில் நேற்று ஒரே நாளில், நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டியது தொடர்பாக போக்குவரத்துக் காவல்துறை 471 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இதில் 121 காவல்துறை வாகனங்களும் அடக்கம். முதல் நாளில் பிடிபட்டோருக்கு காவல்துறையினர் அறிவுரை வழங்கியதோடு, ரூ.500 அபராதம் விதித்துள்ளனர்.

News May 3, 2024

மின் உற்பத்தி நிறுத்தம்

image

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அடுத்த கோனேரிப்பட்டி காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை நீர் தேக்க மின் நிலையம் உள்ளது. இந்த கதவணையில் தற்போது பராமரிப்பு பணிகள் தொடங்கியுள்ளது. இதனால் அணை பகுதியில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது. இதன்காரணமாக நீர் மின் நிலையத்தில் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. இதானல் காவிரி ஆறு தண்ணீரின்றி பாறை திட்டுகளாக காட்சியளிக்கிறது.

error: Content is protected !!