India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் நிகழ்வு இன்று தொடங்கியது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையிலான போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024 வாக்களிக்க இயலாத நிலையில் உள்ள 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40% மேல் உள்ள மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையத்தால் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வாக்காளர்களுக்கு சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) மூலம், தபால் வாக்கு அளிக்க படிவம் 12டி மார்ச் 21,22 தேதியில் வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தேர்தல் சம்மந்தமான தங்கள் புகார்களை 0422-2967797, 0422-2967737, 0422-2967785, 0422-2963430 என்ற எண்களுக்கும்1800-425-1215 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் கிராந்தி இன்று அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் 2024 ஐ முன்னிட்டு ,திருச்சி மாவட்டத்திற்கு தேர்தல் செலவின் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஸரந்தீப், சின்ஹா, முகேஷ் குமார் பிரமனே ஆகியோர் மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமார் முன்னிலையில் இன்று மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டுள்ள, தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
வீ.கே.புதூர் வட்டம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் (ம) தென்காசி கோட்டாட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தென்காசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் மேற்பார்வையாளர்கள் மற்றும் வாக்குசாவடி நிலை அலுவலர்களுக்கான (BLO’s) தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்களை கொண்ட ராட்சத பலூனை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா நேற்று பறக்க விட்டார். தொடர்ந்து நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்களை அங்கிருந்த பொதுமக்களிடம் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, வருவாய்க் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, ஆணையர் சியாமளா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாமக்கல் மக்களவைத்தேர்தல் 2024 தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.உமா இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் செலவின மேற்பார்வையாளருமான அர்ஜுன் பேனர்ஜி ஆகியோர் பார்வையிட்டனர்.
நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவின் அவசியம் குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்திற்கு இன்று காலை வந்த பேருந்துகளில் இருந்த பயணிகளிடம், கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தம்புராஜ் தலைமையில், கடலூர் எஸ்.பி உள்ளிட்டோர் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஏற்கனவே 2 முறை வெற்றி பெற்றுள்ள மாணிக்கம் தாகூருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகருக்கும் பாஜகவில் நடிகை ராதிகா போட்டியிட உள்ளதாகவும் பேசப்படுகிறது. எனவே ஸ்டார் தொகுதியாக இங்கு பிரச்சாரம் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்திய பாராளுமன்ற தேர்தல் தேர்தல் அறிவிப்பு கடந்த 16.03.2024 அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தலை நடத்திட வகை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் குறுஞ்செய்தி மூலமாகவோ சமூக வலைத்தளங்கள் மூலமாகவோ உண்மைக்கு புறம்பான செய்தியை எழுத்து வடிவிலோ, காட்சி வடிவிலோ பரப்பினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை மாவட்ட எஸ்.பி எச்சரித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.