Tamilnadu

News May 3, 2024

நாமக்கல்: தந்தையை தொடர்ந்து மகளும் பலி

image

நாமக்கல்லில் கடந்த 30 ஆம் தேதி சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் சண்முகநாதன் மற்றும் அவரது மகள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விசாரணையில் நதியாவின் மகன் பகவதி விஷம் வைத்தது தெரியவந்தது. இதில் முதியவர் சண்முக நாதன் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது நதியாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பெற்ற மகனே தாய்க்கு விஷம் வைத்து கொன்றது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News May 3, 2024

வேலூரில் நேற்றை விட சற்று குறைந்து காணப்பட்ட வெயில்

image

வேலூர் மாவட்டத்தில் தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது. இன்று (மே.3) அதிகபட்ச வெயிலாக  108.5°F வெயில் பதிவானது. இது நேற்றை விட வெயில் அளவு இன்று சற்று குறைந்து காணப்பட்டது. மேலும் இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்து வருகின்றனர்.

News May 3, 2024

வேலூர் மனநல இல்லம் அமைக்க ஆலோசனை

image

வேலூர் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு புதியதாக மனநல இல்லம் அமைப்பதற்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று (மே.3) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன், மாவட்ட மனநல மருத்துவர் சிவாஜிராவ், மாவட்ட சமூக நல அலுவலர் உமா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News May 3, 2024

மதுவினால் நேர்ந்த விபரீதம்: தகராறில் ஒருவர் கைது

image

திருச்சி கருங்குளத்தை சேர்ந்த ரங்கசாமி, ஜஸ்டின் ஆகியோர் அருகே வசிப்பவர்கள். இவர்கள் இருவரும் நேற்றும் மது அருந்திவிட்டு வாய் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பிரச்சனை பெரிதாகவே இருவரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது ஜஸ்டின், ரங்கசாமியை கடுமையாக கடித்துள்ளார். இதனை அடுத்து ரங்கசாமி அளித்த புகாரின் பேரில் போலீசார் ஜஸ்டினை நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

News May 3, 2024

தி.மலையில் 105 டிகிரி!

image

திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், அதிகபட்சமாக 105 டிகிரி வெயில் பதிவானது. சாலைகளில் அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள், வாகனங்களை சரிவர இயக்க முடியாமல் அவதிப்பட்டனா். உணவகங்கள், வணிக நிறுவனங்களில் வியாபாரம் குறைந்து காணப்பட்டது.

News May 3, 2024

ஆவின் மூலமாக ரூ.1க்கு மோர் வழங்க கோரிக்கை

image

கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆவின் நிறுவனம் மூலம் ஒரு ரூபாய்க்கு மோர் பாக்கெட்டுகளை வழங்க வேண்டும். மே, ஜூன் மாதங்களில் 300 யூனிட் இலவச மின்சாரத்தை தமிழக அரசு பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

News May 3, 2024

மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு புதிய வரவு

image

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நீண்ட நாள் கோரிக்கையான பேட்டரி கார் சேவை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. தொடர்ந்து ஒரு நபருக்கு 30 ரூபாய் கட்டணமாக வசூல் செய்யப்படும் நிலையில் 9994165945 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு ரயில் பயணிகள் பயன்படுத்தலாம் என ரயில்வே நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 3, 2024

திண்டுக்கல் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

image

திண்டுக்கல் மலை அடிவாரம் பகுதியில அமைந்துள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் இன்று அம்மனுக்கு சித்திரை வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இதில் தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

News May 3, 2024

ஆலங்குடி அருகே தீயில் கருகிய சிறுமி: போலிஸ் விசாரணை

image

ஆலங்குடி அருகே கீழப்பட்டியைச் சேர்ந்தவர் பழனிவேல்(53). டாஸ்மாக் மேற்பார்வையாளர். இவரது மனைவி இந்திராணி. இவர்களது மகள் ராஜலெட்சுமி(17). சம்பவத்தன்று பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் வீட்டிலிருந்து கரும்புகை வெளியேறியது. அருகிலிருந்தவர்கள் சென்று பார்த்தபோது ராஜலெட்சுமி உடல்கருகிய நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த சம்பட்டி விடுதி போலிஸார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 3, 2024

வணிகர் சங்க தினத்தை முன்னிட்டு விடுமுறை

image

தமிழகத்தில் வரும் மே 5ஆம் தேதி வணிகர் சங்க மாநாடு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் மாநிலம் முழுவதும் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள், தலைவர், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.

error: Content is protected !!