India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர், சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக இன்று (3.5.2024) சிறப்பு கோடைகால தலைமைப் பண்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தொடங்கிவைத்தார். பின்னர் மாணவ மாணவியருடன் கலந்துரையாடிய ஆட்சியர் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை, வேளாண் பொறியியல் கல்லூரியில் மே.6 ஆம் தேதி முதல் ஜூன்.1 ஆம் தேதிகளில் 7 -18 வயதிற்குட்பட்டோருக்கான கணினித் திறன்களை கற்க கோடைக்கால பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம் குழந்தைகள் தங்கள் கணினித் திறனை வெளிப்படுத்த உதவியாக இருக்கும். பயிற்சிகள் அரை நாள் நடத்தப்படும் என இன்று வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கூறினார்.
சென்னையில் 1000 மின்சார பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக 500 மின்சார பேருந்துகள் விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரையில் 839 பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு தடத்தில் இயக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பேருந்துகளும், இந்த ஆண்டு இறுதிக்குள் புதுப்பிக்கப்பட்டு இயக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெயிலின் தாக்கத்தில் கால்நடைகளை பாதுகாப்பது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். கால்நடைகளை நிழல் தரும் கூரை அடியில் கட்ட வேண்டும், போதுமான அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும், கால்நடை தீவனங்களை வெட்ட வெளியில் போடுவதை தவிர்க்க வேண்டும், அடைக்கப்பட்ட இடத்தில் கால்நடைகளை கட்டுவதை தவிர்க்க வேண்டும், திறந்த வெளியிலான இடங்களில் கால்நடைகளை கட்ட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக முழுவதும் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது.இன்று அக்னி நட்சத்திரம் எனும் கத்தரி வெயில் தொடங்கியதன் தாக்கம் திருச்சியில் இந்த ஆண்டு 7 முதல் 10 டிகிரி வரை வெப்பம் அதிகரித்துள்ளது.நேற்றைய வெப்பநிலை 109.58 வெயில் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காவிட்டால் நிலைமை மோசமாகிவிடும் என சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், பகலில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. கடற்கரைகள், சாலைகள் மற்றும் பேருந்து நிலையம், சந்தைப் பகுதிகளில் மக்கள் கூட்டம் குறைந்தே காணப்படுகிறது. இந்த நிலையில் புதுச்சேரியில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக வானிலை மைய வட்டாரங்கள் சார்பில் தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் வரும் நாட்களில் கோடை வெயில் வழக்கத்தை விட அதிகரித்து அதிகவெப்ப நிலை நிலவக்கூடும் என்பதால் வயதானவர்கள், குழந்தைகள் காலை 11.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை அத்தியாவசிய பணிகள் இல்லாமல் வெளியே செல்வதை தவிர்த்தல் வேண்டும். உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க தேவையான அளவு தண்ணீர் பருகுதல் வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.
ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டை கிருஷ்ணா நகை கடையில் ஏப்.16ஆம் தேதி 5 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி முனையில் நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றனர். கொள்ளையடிக்கப்பட்ட 2.5 கிலோ தங்கத்தில் 700 கிராம் தங்கம், 4 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 8 குற்றவாளிகளில் 4 பேர் கைது செய்துள்ளனர். மேலும் 4 பேரை தேடி வருவதாக ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (மே.3) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 27 மதுபாட்டில்கள், 100 கிராம் கஞ்சா, 30 லிட்டர் கள்ளச்சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்து ஒரே நாளில் 7 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடைகாலம் ஆரம்பமான முதலே வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்த நிலையில், மக்கள் நாள்தோறும் வெயிலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் 107.6 டிகிரி செல்சியஸ் அடித்துள்ளது. இதனால் வியாபாரிகள் வியாபாரம் இல்லாமலும் . மாலை வேலைகளில் மக்கள் அதிகமாக வருவதாகவும் பணிச்சுமை அதிகமாவதாக தெரிவிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.