India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சுவாமி பவளமாலை அலங்காரத்தில் காட்சியளித்தார். நெல்லையப்பர் கோவில் வசந்த விழாவின் 16ம் நாள் நிகழ்ச்சியில் நேற்று (மே 9) இரவு சுவாமி காந்திமதி அம்பாளுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. அப்போது நெல்லையப்பர் பவள மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் நகராட்சியில் முன்னாள் நகரமன்ற தலைவராக பதவி வகித்தவர் ராசகுமார். இவர் திமுக மூத்த நிர்வாகி ஆவார். திருவள்ளூரில் வசித்து வந்த இவர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு திடீரென உயிரிழந்தார். இவரது மறைவை ஒட்டி இன்று திமுக சார்பில் நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை வாகன ஓட்டிகள் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட திருவண்ணாமலை பேருந்து நிலையத்திற்கு எதிரில் போக்குவரத்து சிக்னல்கள் அமைந்திருக்கும் இடத்தில் காவல்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையினரால் பசுமை பந்தல் அமைக்கப்பட்டது. இதனால் சிக்னலில் நிற்கும் இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் பல இடங்களில் இது போன்ற பசுமை பந்தல் அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஒன்றியம், ஆற்காடு கிராமத்தைச் சேர்ந்த, திமுக வார்டு உறுப்பினர் முத்துராமன், ஜெயபிரகாஷ் ஏற்பாட்டில் நேற்று (மே 9) விழுப்புரம் தெற்கு பாஜக மாவட்ட தலைவர் கலிவரதன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். உடன் மண்டல் தலைவர் ரவிச்சந்திரன், மண்டல் பார்வையாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
உலக செவிலியர்கள் தினம் மே மாதம் 12 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நாளை வரவேற்கும் வகையில் இந்த வாரம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவை பந்தயசாலை பகுதியில் ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பாக “நமது செவிலியர்கள் – நமது எதிர்காலம்” எனும் தலைப்பில் கவனிப்பின் பொருளாதார சக்தி என்ற கருப்பொருளை முன்னிறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பர்கூர் – திருப்பத்தூர் சாலையில் கால்நடை மருத்துவமனை உள்ளது. இந்த கால்நடை மருத்துவமனையில் மருத்துவர்கள் சரிவர இருப்பதில்லை எனவும், இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் தங்களுடைய கால்நடைகளை சிகிச்சைக்காக அருகே உள்ள நகரத்திற்கு கூட்டி செல்ல வேண்டிய சூழல் உள்ளதாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவித்தனர். எனவே அதிகாரிகள் மருத்துவமனையை தினமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் கிரிவீதி பகுதியில் 2 சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நுழைய நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பணியில் இருக்கும் செக்யூரிட்டிகள் தங்களது இரு சக்கர வாகனத்தில் அப்பகுதியில் சுற்றி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வறுமை காரணமாக தொடக்க கல்வி, கல்லூரி கல்வி மற்றும் மேற்படிப்பு தொடர முடியாத மாணவர்களின் விவரத்தை 80561 34333 அல்லது 98418 91000 என்ற எண்ணுக்கு தெரிவிக்க வேண்டும் என்று நீலகிரி ஆசிரியர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த தொலைபேசி எண்களை வகுப்பறை கரும்பலகைகளில் எழுதி வைக்குமாறு தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த மாணவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி வரும் 13ஆம் தேதி நடைபெறுவதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் குறைந்த பட்சம் 2000 க்கு அதிகமான மாணவ மாணவியர் பங்கேற்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள முதன்மை கல்வி அலுவலரை கேட்டுக் கொண்டார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை
ஜி வி ஜி கல்லூரி இளங்கலை கணித்துறை படித்து வரும் மாணவி ஹரிணி சர்வதேச அளவில் நடைபெற்ற வானியல் மற்றும் வானியல் போட்டியில் கலந்து கொண்டு இன்று முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். உடுமலை அறிவியல் கழகம் சார்பில் நடைபெற்ற பல்வேறு மாதிரி வகுப்புகளை பயன்படுத்தி வெற்றி பெற்றதாக மாணவி ஹரிணி தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.