India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஏப்ரல் 19ம் தேதி அன்று விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, விளவங்கோடு பாஜக சட்டமன்ற தொகுதி வேட்பாளராக வி.எஸ்.நந்தினி இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். விளவங்கோடு காங். எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி பாஜகவில் இணைந்த நிலையில், அந்த தொகுதி காலியானது. தொடர்ந்து, மக்களவை தேர்தல் நடைபெறும் தேதி அன்றே விளவங்கோடுக்கும் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
தூத்துக்குடி அய்யர் விளை ஆரோக்கிய புரத்தைச் சேர்ந்தவர் விஷ்வ ஜெயச்சந்திரன். நேற்று இவர் மது போதையில் அங்குள்ள ஒரு வீட்டின் சுவர் ஏரி குதித்து வீட்டிலிருந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றுள்ளார். இதை அடுத்து பக்கத்து வீட்டினர் அவரை பிடித்து தாளமுத்து நகர் போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி நகர காவல் நிலையத்தில் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் அனைத்துக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. தேர்தலில் அரசியல் கட்சியினர் பிரச்சாரம் மேற்கொள்ளும் இடங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடத்தும் இடங்கள் குறித்தும் அவர்களுக்கு காவல்துறை சார்பில் பாதுகாப்பு அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, எஸ்ஐ சுந்தரேசன் உடனிருந்தனர்.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் தே.ஜ. கூட்டணியின் பாஜக வேட்பாளராக கார்த்தியாயினி அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகத்தில் பாஜக நேற்று 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. தலைமையிலான – I.N.D.I.A. கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சச்சிதானந்தம் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் இன்று S.K.M. திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் பெரிய சாமி, சக்கரபாணி கலந்து கொண்டு கூட்டணி கட்சியினரிடம் வேட்பாளரை அறிமுகம் செய்துவைத்தார்.
மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் 4ம் கட்ட பட்டியல் சற்றுமுன் வெளியானது. இதில் நாகை நாடாளுமன்ற தொகுதியில் எஸ்ஜிஎம். ரமேஷ் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 9 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று 14 வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் தே.ஜ. கூட்டணியின் பாஜக வேட்பாளராக நமச்சிவாயம் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகத்தில் பாஜக நேற்று 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
வட சென்னை மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின், பாஜக வேட்பாளராக வழக்கறிஞர் பால் கனகராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024 தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக பாஜக நேற்று 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவித்த நிலையில், தற்போது 2ம் கட்டமாக 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
மதுரை மக்களவைத் தொகுதியில் பாஜகவின் சார்பாக பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் சீனிவாசனை வேட்பாளராக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசனும் , அதிமுகவில் டாக்டர் சரவணனும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பாஜக சார்பில் பேராசிரியர் ராம.சீனிவாசன் அறிவிக்கப்பட்டுள்ளார். எனவே தற்போது மதுரையில் போட்டி களம் சூடு பிடித்துள்ளது.
மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் 4ம் கட்ட பட்டியல் சற்றுமுன் வெளியானது. இதில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் அஸ்வத்தாமன் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 9 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று 14 வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.