Tamilnadu

News March 22, 2024

சேலம் : அதிமுக வேட்பாளர் விபரம்

image

சேலம் தொகுதி அதிமுக வேட்பாளராக ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் பி.விக்னேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். பெயர்: பி.விக்னேஷ், வயது: 31 கல்வித்தகுதி: பொறியியல் பட்டதாரி ஊர்: திண்டமங்கலம், தொழில்: விவசாயம் கட்சிப் பதவி: ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர். குடும்பம்: தந்தை பரமசிவம் (ஓமலூர் வடக்கு ஒன்றிய அதிமுக அவைத் தலைவர், தாய் தனபாக்கியம் திண்டமங்கலம் ஊராட்சித் தலைவர். மனைவி பிரியா, மகள் ரேஷ்னிகா (1).

News March 22, 2024

வேலூர்: ஆட்சியர் சொன்ன புதிய தகவல்

image

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு வேலூா் மாவட்டத்தில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், உரிய ஆவணமின்றி எடுத்துவரப்பட்டதாக காட்பாடியில் ரூ.9,49,500, அணைக்கட்டில் ரூ.5,89,500, குடியாத்தத்தில் ரூ.5,12,200, வேலூரில் ரூ.5,03,790, கே.வி.குப்பத்தில் ரூ.4,05,950 என மொத்தம் ரூ.29,60,940 பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

News March 22, 2024

திருச்சி: நடனமாடி மக்களை ஈர்த்த பெண்கள்

image

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று திருச்சி மற்றும் பெரம்பலூர் தொகுதி வேட்பாளர்களை சிறுகனூரில் ஆதரித்து பேசுகிறார். இதை முன்னிட்டு பிரச்சார கூட்டத்திற்கு வருகை தரும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை ஈர்க்கும் விதமாக ஸ்டாலின் மற்றும் உதயநிதி படத்துடன் மயில் தோகை போன்ற இறக்கையுடன் பெண்கள் நடனம் ஆடி பொதுமக்களை கவர்ந்தனர்.

News March 22, 2024

வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல் கட்ட பயிற்சி

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி வாக்குச்சாவடி முகவர்களுக்கு வரும் 24.03.2024 ராசிபுரம், நாமக்கல், பரமத்திவேலூர், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய இடங்களில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான முதல் கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News March 22, 2024

அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிக்கை வெளியீடு

image

தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வருகின்ற 24.03.2024 மாலை 3 மணியளவில் வடலூர், மங்கையர்கரசி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ளுமாறு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News March 22, 2024

தென்காசியில் கனமழைக்கு வாய்ப்பு!

image

தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்துள்ளதாவது, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று (மார்ச் 22) மழை பெய்த நிலையில், தென்காசி மாவட்டத்திலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார். அதன்படி, இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் கன்னியாகுமரி, திருவனந்தபுரம், நெல்லை தென்காசி, கொல்லம், பத்தனம்திட்டா பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளார்.

News March 22, 2024

புதுச்சேரி: தமிழிசை டெபாசிட் இழப்பார்

image

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து இந்தியா கூட்டணி கட்சியின் செயல்பாடுகளை முடக்க முடியாது. புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஆதரவு கேட்போம். மேலும் தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் தமிழிசை டெபாசிட் இழப்பார் எனத் தெரிவித்தார்.

News March 22, 2024

நான்கு தாலுகாவிற்கு உள்ளூர் விடுமுறை

image

ஒசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி ஆகிய தாலுகாக்களுக்கு மார்ச் 25-ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சந்திரசூடேஸ்வரர் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு 4 தாலுகாக்களில் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை என ஆட்சியர் கே.எம்.சரயு அறிவித்தார். மேலும், மார்ச் 25 உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஏப்.6 பணி நாள் எனவும் அறிவித்துள்ளார்.

News March 22, 2024

ஈரோடு: 2 நாள் போக்குவரத்து மாற்றம்

image

சத்தியமங்கலம் அடுத்த மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் குண்டம் திருவிழா மார்ச் 26 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் மார்ச் 25 மதியம் 2 மணி முதல் மார்ச் 26 இரவு 9 மணி வரை பண்ணாரி-ஆசனூர் வழியாக மைசூர் செல்லும் அனைத்து வாகனங்களும் டி.ஜிபுதூர் நால்ரோடு-கடம்பூர்-ஆசனூர் வழியாக மைசூர் செல்லலாம் என சத்தியமங்கலம் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 22, 2024

விகே. புரத்தில் போக்சோ சட்டத்தில் முதியவர் கைது

image

விகே. புரம் கட்டப்புளியை சேர்ந்தவர் பாபநாசம் (74). இவர் அந்த பகுதியில் இட்லி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் சம்பவத்தன்று கடைக்கு இட்லி வாங்க வந்த 9 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில் போலீசார் பாபநாசத்தை போக்சோ சட்டத்தில் இன்று ( மார்ச் 22 ) கைது செய்தனர்.

error: Content is protected !!