India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தூத்துக்குடி மாவட்டம் காயாமொழி அருகே தண்டுபத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
குமரி ஆரல்வாய் மொழியைச் சேர்ந்த கல்லூரி முதல்வர் தினகரனிடம், கோவை மயிலேறிபாளையம் சுப்ரமணி என்பவர் தொடர்பு கொண்டு ரூ.1.25 லட்சம் கட்டினால் 3 ஆண்டுகளில் நல்ல லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார். இதனை நம்பி ரூ.1.13 கோடி முதலீடு செய்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு ரூ.47 லட்சம் பெற்ற நிலையில் மீதம் தரவில்லை. இப்புகாரின் பேரில் போலீசார் சுப்ரமணி உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
வந்தவாசி அடுத்த நடுக்குப்பம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் பொது தேர்வில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் 100% தேர்ச்சி பெற வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வு நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர். மேலும் அனைத்து மாணவர்களுக்கும் இரண்டு மாதங்களாக மாலை நேர சிற்றுண்டி வழங்கிய முன்னாள் மாணவர்கள் சேதுராமன், ஈஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர்.
உதகை அருகே தும்மனட்டியில் உதகை கிழக்கு மண்டல் மையக்குழு கூட்டம் நேற்று (மார்ச் 22) நடைபெற்றது. மண்டலத் தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ராமன், மாவட்ட துணை தலைவர் பாபு, மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரன், மாவட்ட தமிழ் இலக்கியப் பிரிவுத் தலைவர் ராஜூ, மண்டலப் பொதுச்செயலாளர் பெள்ளி ராஜ் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.
திருத்துறைப்பூண்டி அருள்மிகு ஶ்ரீ முள்ளாச்சி மாரியம்மன் கோவில் பெருந்திருவிழா நேற்று நடைபெற்றது. தி.து.பூண்டி மலர் வணிக வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் சார்பில் அம்பாளுக்கு ஊஞ்சல் உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதியின் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் வினோஜ் செல்வத்தை, கடலூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கோவிலானூர் ஜி. மணிகண்டன் தலைமையில், பாஜக மாவட்ட, மண்டல நிர்வாகிகள் நேற்று நேரில் சென்று சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய பகுதிகளில் திருவண்ணாமலை மற்றும் வேலூர் தொகுதி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள மார்ச்.26 திமுக இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ தேவராஜ் செய்து வருகிறார்.
இராமநாதபுரம் கேணிக்கரையில் உள்ள தனியார் திருமண மஹாலில் நாடாளுமன்றத் தொகுதியில் இண்டி கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
கீழக்கரை சார்பாக நகர் கழக செயலாளர் பசீர் அஹமது தலைமையில் கீழக்கரை நகர் கழக நிர்வாகிகள் பெரும்பாலோனோர் கலந்துகொண்டனர். மாவட்டத்தில் உள்ள பல ஊர்களிலிருந்து கழக நிர்வாகிகள் பலரும் வந்து கலந்து கொண்டனர்.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டையில் நேற்று அங்கன்வாடி பணியாளர்கள், 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அகல் விளக்கு ஏற்றி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். இதில் அங்கன்வாடி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பழனி அடிவாரம் குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் கோயில் முன் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் அமைக்கப்பட்ட தனிமேடையில் இன்று(மார்ச்.22) நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து தம்பதி சமேதராக சுவாமி, வெள்ளித்தேரில் சந்நிதி வீதி, ரதவீதிகளில் உலா எழுந்தருளுகிறார். நாளை(மார்ச்.23) மலையடிவாரத்தில் உள்ள கிரிவீதியில் தேரோட்டம் நடைபெறுகிறது.
Sorry, no posts matched your criteria.