Tamilnadu

News March 23, 2024

விழுப்புரம் சுயேச்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

image

விழுப்புரம், நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் துவங்கி முதல் இரண்டு நாட்கள் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் நேற்று (மார்ச் 22) உளுந்தூா்பேட்டை வட்டம், பாண்டூா் புதுகாலனியைச் சோ்ந்த கேசவன் மகன் அரசன் (72) விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சி.பழனியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.

News March 23, 2024

கிருஷ்ணகிரியில் உலக நீர் தினம் கடைப்பிடிப்பு

image

ஊத்தங்கரை அடுத்த படப்பள்ளி ஊ.ஒ.ந.நி பள்ளியில் நேற்று (மார்ச் 22) உலக நீர் தினம் பொறுப்பு தலைமை ஆசிரியர் பிரதீபா தலைமையில் கடைப்பிடிக்கப்பட்டது. நீரின் சேமிப்பு, அவசியத்தை மாணவர்களுக்கு எடுத்துக் கூறினர். உலக நீர் தினத்தை முன்னிட்டு ஓவியம், கவிதை, சுலோகன், பேச்சுப் போட்டிகள் மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. இறுதியில் நெகிழி பையை தவிர்த்து மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

News March 23, 2024

நெல்லை: அளவற்ற மகிழ்ச்சியில் மாணவர்கள்

image

தமிழகம் முழுவதும் நேற்று (மார்ச் 22) பிளஸ் 2 தேர்வு முடிந்தது. நெல்லை மாவட்டத்திலும் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ் டூ தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவ மாணவிகள் தங்கள் அளவற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து செய்தியாளரிடம் அவர்கள் கூறும் போது பள்ளி படிப்பை முடித்து கல்லூரி படிப்புக்கு செல்லும் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என கூறினர்.

News March 23, 2024

ராணிப்பேட்டை: தேர்தல் குறித்த சிறப்பு ஆலோசனை கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலக கலந்தாய்வு கூடத்தில் மாவட்ட காவல் தேர்தல் குறித்த சிறப்பு ஆலோசனைக் கூட்டம் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் குமார், குணசேகரன். துணை காவல் கண்காணிப்பாளர்கள் பிரபு, வெங்கடேசன் அரக்கோணம் உட்கோட்டம் மற்றும் மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர்

News March 23, 2024

விருதுநகர்: தாக்கலாகாத வேட்புமனு

image

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் துவங்கி நடைபெற்று வருகிறது.விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் நேற்றுமுன்தினம் ஒரு வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.நேற்று வேட்புமனு தாக்கலாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. எனவே 3 நாட்களாக நடைபெற்ற வேட்பு மனுவில் ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 23, 2024

மயிலாடுதுறை மக்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான புகார்களை 1800 425 8970 , 04364 -211722 என்ற எண்ணிலும், திருவிடைமருதுார் தொகுதிக்கு 0435-240187, கும்பகோணம் தொகுதிக்கு 0435-2430101 , பாபநாசம் 0437-4222456 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தேர்தல் அலுவலர் மகாபாரதி நேற்று தெரிவித்துள்ளார்.

News March 23, 2024

கன்னியாகுமரியில் ‘செல்பி’ பாயிண்ட்

image

100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் ‘செல்பி’ பாயிண்ட் நேற்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் நின்று பொதுமக்கள் மற்றும்
சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் ‘செல்பி’ எடுத்து செல்கிறார்கள்.

News March 23, 2024

சேலம்: திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

image

சேலம் மத்திய மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ இக்கூட்டத்தில் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். இதில் வருகின்ற மக்களவைத் தேர்தலில் பகுதி வாரியாக தேர்தல் பணியாற்றுவது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.

News March 23, 2024

100% வாக்களிப்பை உறுதி செய்ய விழிப்புணர்வு

image

கம்பம் புதுப்பட்டி பேரூராட்சியில் நாடாளுமன்றத் தேர்தலில் 100% வாக்களிப்பை உறுதி செய்தல், உறுதிமொழி எடுத்தல், துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தல் போன்ற பணிகளில் மகளிர் திட்ட அலுவலர் தலைமையில் க.புதுப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் யசோதா மற்றும் அலுவலர்கள்  ஈடுபட்டனர். இதில் ஏராளமான பொது மக்களுக்கு துண்டு பிரதிகள் வினியோகம் செய்யப்பட்டது. மக்கள் வாக்குகளை தவறாமல் பதிவு செய்ய உறுதிமொழி ஏற்றனர்.

News March 23, 2024

100% வாக்குப்பதிவு வலியுறுத்தி கோலமிட்டு விழிப்புணர்வு

image

ஈரோடு மாநகராட்சி இரண்டாவது மண்டலம் 29ஆவது வார்டு சம்பத்நகர் பகுதியில் குறைந்த வாக்கு சதவிகிதம் உள்ள பகுதியில் உள்ள வாக்காளர்களிடம் 100 % வாக்குகள் பெற விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் விழிப்புணர்வு கோலங்கள் வரைந்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்வில் மாநகராட்சி செயற்பொறியாளர் மற்றும் வாக்கு சாவடி நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!