India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் மாவட்ட தடகள கழக மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்ட தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு கோடைகால சிறப்பு பயிற்சி முகாம், கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் நாளை 15 ஆம் தேதி முதல் நடக்கிறது. சிறந்த பயிற்றுநர்கள் மற்றும் மூத்த தடகள வீரர்கள் மூலம் விளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன பயிற்சிகள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது. மேல்வழி மண்டல கீழ அடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. மேலும் குமரி கடல் பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்காசி மாவட்டத்தில் மழை தீவிரமடைந்துள்ளது. நேற்று(மே 13) பரவலாக மழை பெய்த நிலையில் இன்றும்மஃ(மே14) சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மாநில பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கில், காற்றின் திசை மாறுபாடு நிலவுகிறது. இதனால், சிவகங்கை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று காலை 10 மணி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தென்மாநில பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கில், காற்றின் திசை மாறுபாடு நிலவுகிறது. இதனால், தஞ்சை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று காலை 10 மணி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
திருவாடானை ஓரியூர் சாலையில் டாஸ்மாக்
உள்ளது. இதன் எதிரே உள்ள அத்தாணி வயல் கண்மாயில் இன்று அதிகாலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று தண்ணீரில் மிதந்துள்ளது. இது குறித்து திருவாடானை கிராம நிர்வாக அலுவலர் நாகேந்திரன் அளித்த புகாரின்பேரில் திருவாடானை போலீசார் சடலத்தை மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனைக்கு
பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தினர்.
முக்கூடல் அருகேயுள்ள பாப்பாக்குடி பகுதியை சேர்ந்த மாடசாமி மனைவி ஆண்டாள் (60) என்பவர் நேற்று ஆடு மேய்த்து கொண்டிருந்தார். இந்நிலையில் மழை பெய்ததால் சாலையோரத்தில் மரத்தடியில் நின்றுள்ளார். அப்போது மின்னல் தாக்கியதில் மூதாட்டி ஆண்டாள் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இருவருக்கு லேசான காயமும் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பாப்பாக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மைசூரிலிருந்து மயிலாடுதுறைக்கு வரும் ரயில் காலதாமதமாக வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மயிலாடுதுறையில் இருந்து காலை 8.05 மணிக்கு இதே ரயில் சற்று காலதாமதமாக காலை 9.20 மணிக்கு கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் வழியாக திருச்சிக்கு புறப்படும் என ரயில் பயணிகள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் நேற்று மழை பெய்ததால் நேற்று வரை வினாடிக்கு 100 கன அடியாக இருந்த அணையின் நீர்வரத்து, இன்று காலை முதல் வினாடிக்கு 405 கனஅடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 115.10 அடியாகவும் அணியிலிருந்து தமிழக பகுதிக்கு விவாதிக்க நூறு கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. பெரியார் அணை 24.8 மி.மீ, தேக்கடி 6.மி.மீ மழை பதிவாகி உள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நாமக்கல் அடுத்த வெண்ணந்தூருக்கு வருவதை முன்னிட்டு பாதுகாப்பு கருதி நாமக்கல், ராசிபுரம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில்
இன்று ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதன்படி இன்று காலை 10 மணி வரை விருதுநகர் உள்ளிட்ட 7 மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.