India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி நேற்று(மே 13) வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மாதாந்திர பராமரிப்பு தொகை, வங்கி கடன் திருமண உதவித்தொகை போன்றவைகள் பெறுவதற்கு இணையதளம் மூலமே விண்ணப்பிக்கலாம். இதற்காக தாலுகா அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தியுள்ளார்.
பெரம்பலூர் ஆயுதப்படை மைதானத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் இன்று காலை 10- மணியளவில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார். இதுகுறித்து பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே காங்கிரஸ் நிர்வாகி மர்மமான உயிரிழந்த நிலையில் நேற்று திருநெல்வேலியில் ஐஜி கண்ணன் ராமஜெயம் கொலை வழக்கையும் கேபிகே ஜெயக்குமார் சந்தேகம் மரணமும் ஒன்றாக கருத முடியாது. ராமஜெயம் வழக்கினை எடுத்த மாத்திரத்திலேயே கொலை என அறியப்பட்டது. ஆனால் காங்கிரஸ் தலைவர் மரணத்தை அவ்வாறு கூற முடியாது என தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மாவட்டம் முழுவதும் மாம்பழம் மற்றும் தர்பூசணி விற்பனை செய்யும் கடைகள் குடோன்களில் ஆய்வு செய்து வருகின்றனர். இதில், திருப்பூரில் 102 கடைகளில் ஆய்வு செய்து 12 கடைகளில் விதிமுறைகளை கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று செயற்கை முறையில் பழுக்க வைத்த 300 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்து அழித்தனர்.
குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக மலையோர பகுதிகளில் நல்ல மழை பெய்கிறது. மேலும் நேற்று, நேற்று முன் தினம் பெய்த மழை காரணமாக அணைகளிலும் தண்ணீர் வரத்து வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகளில் மழை காரணமாக நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. கோடை மழை காரணமாக குமரி மாவட்டத்தில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.
காஞ்சிபுரம் சரக டிஐஜி பொன்னி மத்திய அரசு பணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில், காஞ்சிபுரம் சரக டிஐஜியாக பணியாற்றி வரும் பொன்னி, மத்திய தொழிலா பாதுகாப்புபடை பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதே போல், மதுரை டிஐஜியாக பணியாற்றி வரும் ரம்யபாரதி விமான பாதுகாப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.5.55 காசுகளாக இருந்து வந்த நிலையில்,நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை ரூ.5.60 காசுகளாக அதிகரித்துள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.134-க்கும், முட்டை கோழி கிலோ ரூ.98-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.
எருமப்பட்டி அடுத்த செவ்வந்திப்பட்டி ஆட்டு சந்தையில், ஆடுகளின் வரத்து அதிகரித்து காணப்பட்டது.நேற்றைய ஆட்டுச்சந்தையில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். நாமக்கல் மாவட்டம் முழுவதும் கிராமப் பகுதிகளில் மாரியம்மன் பண்டிகை நடைபெற்று வருவதால் ஆடுகளை வாங்க வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர்.இதனால் ஆடுகள் ரூ.43 லட்சத்துக்கு விற்பனையானது.
மயிலாடுதுறை, தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் பகுதிகளில் நேற்று பல்வேறு இடங்களில் கோடை வெப்பம் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. ஒரு சில இடங்களில் அவ்வப்பொழுது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தரங்கம்பாடி தாலுக்கா சங்கரன் பந்தல் மற்றும் உத்தரங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலையில் சாரல் மழை பெய்தது.
சோளிங்கர், மேல் வீராணம் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மன். இவர் நேற்று இரவு பாணாவரம் – காவேரிப்பாக்கம் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத பைக் மோதியதில், படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.