Tamilnadu

News May 18, 2024

கிருஷ்ணகிரி: காட்டு முனியப்பன் கோயில் திருவிழா

image

கிருஷ்ணகிரி மலை மேல் அமைந்துள்ள கல்லித்திபாறை காட்டு முனியப்பன் கோயில் திருவிழாவை ஒட்டி நேற்று காலை 9 மணிக்கு பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று காட்டு முனியப்பன் கோவிலுக்கு மேளதாளங்கள் முழங்க பால் குடங்களை ஊர்வலமாக கொண்டு சென்றனர். அங்கு முனியப்பனுக்கு பால் அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை நடந்தது. மேலும் நாளை ஆடுகள் வெட்டி விருந்து அளிக்கப்படுகிறது.

News May 18, 2024

திண்டிவனம்: பொதுமக்களுக்கு வாந்தி கண்ணெரிச்சல்

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஐயன் தோப்பு பகுதியில் அமைந்துள்ள புதிய திருவண்ணாமலை புறவழிச்சாலையில், தனியார் பள்ளி அருகே நேற்று முன்தினம்(மே 16) நள்ளிரவு யாரோ சில மர்ம நபர்கள் கெமிக்கல் அடைக்கப்பட்ட பேரல்களை வீசி சென்றுள்ளனர். அந்த பேரல்களில் இருந்து மூச்சுத் திணறலை ஏற்படுத்தும் நெடி வீசியதால் அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

News May 18, 2024

வேலூர் அருகே துர்கையம்மன் திருவீதி உலா

image

பிரசித்தி பெற்ற சத்துவாச்சாரி ஸ்ரீ சாலை கெங்கையம்மன் அம்மன் திருவிழா வரும் மே மாதம் 21, 22ஆம் தேதிகளில் முத்தரையர் சமுதாயத்தினரால் நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு முதல் நாளான நேற்று மாலை 6 மணிக்கு மறுக்காப்பு அணிவித்து பின்னர் இரவு 9 மணிக்கு துர்க்கை அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இத்திருவீதி உலாவில் திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

News May 18, 2024

நாட்டுப் படகு மீனவர்களுக்கு மீண்டும் எச்சரிக்கை!

image

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 நாட்கள் கனமழை பெய்வதுடன் கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்தும் சில நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர். எனவே மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீண்டும் எச்சரிக்கப்படுவதாக மீன்வளத் துறை நேற்று(மே 17) தெரிவித்துள்ளது.

News May 18, 2024

திருச்சி: செயின்ட் ஜோசப் கல்லூரிக்கு விசிட்

image

திருச்சிராப்பள்ளியில் உள்ள புராதான கட்டிடங்களை பார்வையிடுவதன் ஒரு பகுதியாக திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் பழமையான கட்டிடங்களை நேற்று ஆட்சியர் பிரதீப் குமார் பார்வையிட்டார். மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை பார்வையிட்ட ஆட்சியர் அங்குள்ள பழமையான பொருட்கள் குறித்து பேராசிரியர்கள் இடம் கேட்டு அறிந்தார்.

News May 18, 2024

திருப்பூர்: பட்டு வளர்ப்பு மையத்தில் மாணவர்கள் ஆய்வு

image

திருப்பூர் மாவட்டம் மானுப்பட்டியில் உள்ள விவசாயி ஒருவரின் இளம் புழு பட்டு வளர்ப்பு மனையில் வேளாண்மை கல்லூரி மற்றும் மணக்கல்லூரி ஆராய்ச்சி நிலையம் மாணவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பட்டு வளர்ப்பு மையத்தில் அதிக கழிவுகள் வீணாக வெளியேறுவதை அறிந்த மாணவர்கள் கழிவுகள் மூலம் உரம் தயாரிக்கும் முறை பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் விரிவாக விவசாயிகளுக்கு விளக்கினர்.

News May 18, 2024

சிவகங்கையில் 2.37 லட்சம் பேர் பயன்

image

சிவகங்கை ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த மூன்றாண்டுகளில் மகளிா் உரிமைத்தொகை திட்டத்தில், சிவகங்கை மாவட்டத்தில் 2, 37, 897 குடும்பத் தலைவிகள் பயன் பெற்றனா் மகளிா் இலவசப் பயணத் திட்டத்தின் மூலம் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த 6,22,04,327 போ் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்தனா்.
முதல்வரின் காலை உணவுத் திட்டம் மூலம் 33,568, ‘பயனடைந்துள்ளனர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News May 18, 2024

பெரியகுளம்: தங்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

image

திருச்சியில் நடந்த மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் பெரியகுளம் மாணவர்கள் தங்க பதக்கம் வென்றனர்.
பெரியகுளம் மார்சியல் ஆர்ட்ஸ் அகாடமியில் மாஸ்டர் ரமேஷிடம் வில்வித்தை பயிற்சி பெற்ற மாணவர்கள் நேதீஷ் குமார் பிரித்தீஷ் குமார் ஆகியோர் திருச்சி துறையூரில் நடந்த மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் பங்கேற்றனர். இருவரும் முதலிடம் பெற்று தங்க பதக்கங்களை வென்று பாராட்டு பெற்றனர்.

News May 18, 2024

நெல்லை: தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுவினர்

image

நெல்லை மாவட்டத்தில் மே 18 மற்றும் 19ஆம் தேதிகளில் கனமழை பெய்யும் என ஆரஞ்சு நிற எச்சரிக்கையை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து நேற்று (மே 17) சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு தமிழ்நாடு காவல்துறை பேரிடர் மீட்பு குழுவினர் ஒரு ஆய்வாளர் தலைமையில் 90 காவலர்கள் வந்தனர். பேரிடர் மீட்பு பணிகளுக்காக அவர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

News May 18, 2024

நீர் நிலைகளை கண்காணிக்க வேண்டும்

image

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டு 17 வயது அஸ்வின் என்ற சிறுவன் இறந்தார் என்பது வருத்தத்திற்குரிய சம்பவம் ஆகும். குற்றாலம் மட்டும் இன்றி அனைத்து மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளை அரசு கண்காணிக்க வேண்டும், உயிர் சேதங்களை தடுக்க வேண்டும் என நேற்று குனியமுத்தூரில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!