India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி இன்று ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. ஆட்சியர் சாரு ஸ்ரீ தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் அமுதா மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
பழனி அடிவாரம் பழனி ரவுண்டான சாலை, ஐயம்புள்ளி சாலை, பாலசமுத்திரம் செல்லும் சாலை ஆகிய சாலைகளில் வாகனங்கள் நிற்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது .
மேலும் அப்படி வாகனங்களை ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்கு மேல் நிறுத்தினால் காவல் துறை மூலமாக அந்த வாகனம் லாக் செய்து பறிமுதல் செய்யப்படும் என பழனி உட்கோட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 48 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
56 பேர் கைது செய்யப்பட்டு 63 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மூன்று இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் 283 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 292 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ சீனிவாசன் பெருமாள் கோயிலில் ஏகாதசியை முன்னிட்டு நேற்றிரவு (மே 20) ஸ்ரீ சக்தி அம்மா தலைமையில் 1008 பாரம்பரிய நெய் தீபம் ஏற்றி சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீ சீனிவாச பெருமாளை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
ராதாபுரம் முன்னாள் சட்டமன்ற அதிமுக உறுப்பினர் இன்பதுரை இன்று (மே 20) தனது முகநூல் பக்கத்தில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், வள்ளியூர் வழியே செல்லும் அனைத்து அரசு புறநகர் பேருந்துகளும் வள்ளியூருக்குள் வராமல் புறவழிச் சாலை வழியாக செல்லும் மர்மம் என்ன? ராதாபுரம் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் என்ற ஒருவர் இருக்கிறாரா? இல்லையா? என சபாநாயகர் அப்பாவுவை குற்றம் சாட்டியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து திருமண மண்டப உரிமையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், “திருமணம் நடத்த முன்பதிவு செய்ய வரும் மணமகன் மற்றும் மணமகள் ஆகியோரின் ஆதார் அட்டை மூலம் பிறந்த தேதி மற்றும் நிரந்தர முகவரி ஆகியவற்றை உறுதி செய்த பின்னரே திருமணம் நடைபெற வழிவகை செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரிலுள்ள 40வது வார்டு பாஜக மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் காமன்தொட்டி பகுதியை சேர்ந்த சிவா மற்றும் அவரது ஆதரவாளர்கள் 50 நபர்கள் மாநில பொதுக்குழு உறுப்பினர் நாராயணஸ்வாமி தலைமையில் மாவட்ட தலைவர் நாகராஜ் முன்னிலையில் பாஜகவில் இன்று இணைந்தனர். உடன் மாவட்ட துணை தலைவர் முருகன், அமைப்புசாரா பிரிவு மாநில துணை தலைவர் ஸ்ரீனிவாசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சென்னை பன்னாட்டு விமான நிலைய புறப்பாட்டு பகுதியில் விமான நிலைய உணவு விடுதி ஒன்றில் ஒப்பந்த ஊழியராக பணி புரியும் மணிகண்டன் (28) கையில் பிளாஸ்க் ஒன்றுடன் வந்தார். மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அவரை பரிசோதித்த போது அந்த பிளாஸ்கினுள் காபிக்கு பதிலாக 1 கிலோ 300 கிராம் எடையுள்ள தங்க கட்டிகள் இருந்தது. இதனை அடுத்து சுங்க அதிகாரிகளால் மணிகண்டன் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் இன்று அகில பாரத இந்து மக்கள் அமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதில் திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்களை அச்சுறுத்தும் வகையில் கோவில் வளாகத்திற்குள் வெறி நாய்களும், மாடுகளும் சுற்றி திரிகின்றன. சமீபத்தில் சென்னையில் வளர்ப்பு நாய் ஒன்று சிறுமியை கொடூரமாக கடித்தது. இதனால் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரினர்.
தென்காசி, பழைய குற்றாலம் பகுதியில் கடந்த 4 தினங்களுக்கு முன்னர் பெய்த கன மழையால் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டது. சிறுவன் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். இங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை முதல் பழைய குற்றாலம் அருவி மற்றும் மலைப்பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்கிறது. இதனால் மீண்டும் நீர் வரத்து அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
Sorry, no posts matched your criteria.