India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள 143 அடி முழு கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை மற்றும் 156 அடி முழு கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணை ஆகிய அணைகளில் இருந்து வினாடிக்கு 254.75 கன அடி தண்ணீரும், 118 அடி முழு கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையிலிருந்து வினாடிக்கு 245 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதாக இன்று(மே 22) காலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வில் 608 மாணவ மாணவிகளும், பிளஸ் ஒன் தேர்வில் 1247 மாணவ மாணவிகளும், எஸ்எஸ்எல்சி தேர்வில் 231 மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 2ம் தேதி முதல் எட்டாம் தேதி வரையிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் நேற்று தெரிவித்துள்ளார்.
மதுரை ஆவின் நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வந்தது. இந்நிலையில் கொள்முதல், டிரான்ஸ்போர்ட், மின்சிக்கனம் , நிர்வாக செலவினங்கள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டு பால் கொள்முதல் விற்பனையில் அதிக கவனம் செலுத்தியதன் இதன் மூலம் ரூ.3.50 கோடி நஷ்டத்தில் இருந்து மீட்டு தற்போது ரூ.4.50 கோடி லாபம் உயர்ந்துள்ளதாக பொதுமேலாளர் சிவகாமி நேற்று அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை தாலுகாவை சோ்ந்த சங்கம்விடுதி ஊராட்சி குருவாண்டான் தெருவிலுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் ஏப்.25 ஆம் தேதி மாட்டுச் சாணம் கலக்கப்பட்டதாக புகாா் எழுந்தது. மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டியில் மாட்டுச் சாணம் கலக்கப்பட்டதாக கூறப்பட்ட விவகாரத்தில், மனுதாரா் உள்பட 3 பேரிடம் சிபிசிஐடி போலீசார் நேற்று(மே 22) விசாரணை மேற்கொண்டனர்.
இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி அமைப்பின் மாநிலத்தலைவராக இருந்தவர் ராஜாஜி (45). நேற்று மாலை இவர் பூந்தமல்லியில் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் பூந்தமல்லி, குமணன்சாவடி பகுதியைச் சார்ந்த காங்கிரஸ் பிரமுகர் கோபால் (61), கிருஷ்ணகுமார் (34), சம்பத்குமார் (45), லோகநாதன் (38), சந்தோஷ்குமார் (32), ராஜேஷ் (32) உள்பட 6 பேரை இன்று காலை கைது செய்தனர்.
திருப்பூர் அருகே பூலுவபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த 2 மாணவிகள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றனர். தொடர்ந்து 2 மாணவிகளும் பிளஸ் ஒன் படிக்க அருகில் உள்ள கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்வதற்காக சென்றனர். அப்போது சேர்க்கை கட்டணமாக தலா 3350 செலுத்த வேண்டும் என கூறினர். இதனால் மாணவிகளின் பெற்றோர்கள் கல்வித்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்திய அரசு ஆண்டுதோறும் ஒருவருக்கு நிலம் நீர் மற்றும் ஆகாயத்தில் சாகச விளையாட்டுகளில் சாதனை புரிந்தவர்களை கௌரவிக்கும் வகையில் டென்சிங் நாற்கே தேசிய சாகச விருது வழங்கி வருகிறது. அதன்படி 2023ஆம் ஆண்டுக்கான இந்த விருதுபெற விண்ணப்பிக்கலாம் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் நேற்று தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட தலைமை நீதிபதி சண்முக சுந்தரம் வெளியிட்ட அறிக்கையில், தேசிய மக்கள் நீதிமன்றம் கரூர் ,குளித்தலை நீதிமன்றங்களில் ஜூன், 8ல் நடக்கிறது. அதில், அனைத்து வகையான உரிமையியல் வழக்கு, தொழிலாளர் நல வழக்கு, இதர குடும்ப நல வழக்குகள் தீர்வு காணப்படுகிறது.எனவே வக்கீல்கள்,பொதுமக்கள், வங்கிகள் மற்றும் வழக்காடிகள் தங்கள் வழக்குகளை, தேசிய மக்கள் நீதிமன்றத்தில் எடுத்து கொள்ள முன்வந்து தீர்வு காணலாம்.
அரக்கோணத்தில் இருந்து திருவள்ளூர் செல்லும் ரயில் பாதையில் கடம்பத்தூர் செஞ்சி பானம்பாக்கம் இடையே நேற்றிரவு மின்சார ரயில் மோதி ஒருவர் இறந்து கிடப்பதாக, அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் திருவள்ளூர் அயப்பாக்கத்தைச் சேர்ந்த டில்லி பாபு (44) என்பது தெரியவந்தது.
திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியர் பர்வேஜ்மியா – சல்மா அக்தர், இருவரும் தற்போது பிரிந்து வாழ்கின்றனர். திருப்போரூர் அழகு நிலையத்தில் பணிபுரிந்த சல்மா அக்தர் கடந்த 19ம் தேதி கேளம்பாக்கம் மருத்துவமனையில் தனது கணவருடன் சேர்ந்து 3 பேர் கூட்டு பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவித்தார். போலீசார் விசாரணையில் கணவர் தொந்தரவு செய்ததால் பொய் கூறியது தெரியவந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.