India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரையில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி தேர்தல் கமிஷனுக்கு அதிமுக வேட்பாளர் மற்றும் சுயேட்சை வேட்பாளர் புகார் மனு அளித்துள்ளார். ஆளுங்கட்சிக்கு சாதகமாக மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் சங்கீதா செயல்படுவதாக குற்றச்சாட்டியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த சரவணன், மதுரை பாராளுமன்ற தேர்தல், வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி, இந்திய தேர்தல் கமிஷனுக்கு புகார் மனு அளிக்க உள்ளோம் என்று தெரிவித்தார்.
பெரம்பலூர் மக்களவை தேர்தல் முடிவு விவரம் அறிவிக்கப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கே.என்.அருண் நேரு இரண்டாம் சுற்று முடிவில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இதை தொட்டியம் திமுக மகளிர் அணியினர் கொண்டாடி வருகின்றனர். தொட்டியம் யூனியன் சேர்மன் கிருஷ்ணவேணி தலைமையில் மகளிர் அணியினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடினர்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதி 6 ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் 1,34,005 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பா.ஜ.க வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 90,525 வாக்குகள் பெற்று 2 ஆம் இடத்திலும், அ.தி.மு.க வேட்பாளர் பசுபதி 29,556 வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தில் உள்ளனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 1257 வாக்குகள் பெற்று 4 ஆம் இடத்தில் உள்ளனர்.
திருவள்ளூர் பாராளுமன்ற தனி தொகுதியில் 6வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது இதில் திமுக கூட்டணி 31630 வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளது.. அதிமுக கூட்டணி 8658 வாக்குகள், பிஜேபி 8252 வாக்குகள், நாம் தமிழர் 3831 வாக்குகள், நோட்டா 698 வாக்குகளும் பெற்றுள்ளன. இது 6 வது சுற்றின் வாக்கு எண்ணிக்கை மட்டுமே.
தென்காசி மாவட்ட பாராளுமன்ற தொகுதி 12.25மணி நிலவரப்படி, தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர் ஆகிய ஆறு தொகுதிகளில் என்னப்பட்ட ஓட்டு எண்ணிக்கை நிலவரம். தென்காசி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை விபரம் தற்போது, 12.25 மணி நிலவரம் திமுக 114644, அதிமுக, 60103 பாஜக, 53717 நாத, 33902 வாக்குகள் பெற்றுள்ளது.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்துவருகிறது.
திமுக 1,54,768, தேமுதிக 65,972, பாஜக 50,839, நாம் தமிழர் 40,673 வாக்குகள் பெற்றுள்ளன. திமுக வேட்பாளர் பாஜக வேட்பாளரைவிட 88,796 வாக்குகள் பெற்று முன்னிலையுடன் திகழ்கிறார். ஆரம்பம் முதலே திமுக வேட்பாளர் ஆதிக்கம் செலுத்திவருவது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி பதியப்பட்ட வாக்குகள் வாசுதேவநல்லூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகின்றது. இதில் 9ம் சுற்று திமுக முன்னிலை பெற்றுள்ளது. திமுக மலையரசன் – 2,31,288,அதிமுக குமரகுரு – 2,06,814,பாமக தேவதாஸ் – 29,008,நாதக ஜெகதீசன் – 29,002, இதில் திமுக வேட்பாளர் – 24,474 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்
விருதுநகர் பாராளுமன்ற தொகுதி 5வது சுற்றின் முடிவில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்- 19821 வாக்குகளும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்- 16326 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்- 6738 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌஷிக்- 3367 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்நிலையில் 5வது சுற்றின் முடிவில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் 5119 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
கடலூர் நாடாளுமன்ற தேர்தல் 6 சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் முன்னிலையில் உள்ளார்.
காங்கிரஸ் -153254,தேமுதிக -96459,பாமக -63261,நாதக -18376 வாக்குகள் பெற்றுள்ளனர். விஷ்ணு பிரசாத் 56795 வாக்குக்கள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் முன்னிலையில் உள்ளார்
தென்காசி மாவட்டம் கடந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது ஆய்க்குடி தனியார் கல்லூரியில் வைத்து எண்ணப்பட்டு வருகிறது. இதில் இன்று மதியம் நிலவரப்படி தென்காசி பாராளுமன்ற தொகுதியில் 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் முன்னிலையில் இருக்கிறார். அவருக்கு குற்றாலம் நிர்வாகிகள் சார்பில் வாழ்த்து தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.