India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மக்களவை தொகுதியில் 7வது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளது. திமுக வேட்பாளர் அருண் நேரு 30,026 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் 10,691 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளார். ஐஜேகே 8331 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தில் முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் 5,308 வாக்குகள் பெற்றுள்ளார்.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் எண்ணிக்கை நடைபெற்று வரக்கூடிய நிலையில் 6 சுற்றுகளில் முடிவில் இந்தி கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சுப்பராயன் 137799 வாக்கு பெற்றார். அதிமுக 102634, பாஜக 52770 , நாம் தமிழர் 27084,இந்திய கூட்டணி வேட்பாளர் சுப்பராயன் 35165 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
திண்டுக்கல் தொகுதி வாக்கு எண்ணிக்கை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 8வது சுற்று நிறைவடைந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம்-253118, எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகம்மது முபாரக்-83812, பாமக வேட்பாளர் திலகபாமா – 41492, நாதக வேட்பாளர் கயிலை ராஜன்-34962 வாக்குகள் பெற்றுள்ளனர். சச்சிதானந்தம் 1 லட்சத்து 70 ஆயிரம் வாக்கு முன்னிலை வகிக்கிறார்.
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி 13வது சுற்றின் முடிவில் நவாஸ்கனி, 109228 ஓட்டுகள் பெற்று முதலிடத்திலும், ஓ.பன்னீர்செல்வம்- 60100 ஓட்டுகள் பெற்று இரண்டாவது இடத்திலும், அதிமுக வேட்பாளர் ஜெய பெருமாள், 25751 பெற்று மூன்றாவது இடத்திலும், நாம் தமிழர் – 19300 வாக்குகள் பெற்று உள்ளனர்.
கோவை மக்களவைத் தொகுதியில் மூன்றாவது சுற்று முடிவு: திமுக – 26460, பாஜக – 19868, அதிமுக – 10487, நாதக – 3747, நோட்டா -578, வாக்குகள் பெற்றுள்ளனர். மொத்த எண்ணிக்கை: 62100 வாக்குகள்
திருவண்ணாமலை மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய ஆரணி தொகுதியின் நான்காவது சுற்று முடிவு வெளியாகியுள்ளது. அதில், திமுக – 81,353 வாக்குகளும், அதிமுக – 51,109வாக்குகளும்
பாமக – 41,258 வாக்குகளும், நாதக- 11,551 வாக்குகளும் பெற்றுள்ளன. இதன்படி திமுக வேட்பாளர் எம் எஸ் தரணிவேந்தன் 30,244 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 7வது சுற்றில் திமுக கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.பாலு 1,86,608 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 69,834 வாக்குகளும், பாஜக கூட்டணி தமாக வேட்பாளர் வேணுகோபால் 49,396 வாக்குகளும், நாதக வேட்பாளர் 37,365 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 1,16,774 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
பெரம்பலூர் மக்களவை தொகுதியில் தற்போது வரை அருண் நேரு முன்னிலை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட பாரிவேந்தருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பாரிவேந்தர் 8,331 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தில் உள்ளார். பெரம்பலூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட அவர் பின்னடைவில் இருப்பது பாஜக கூட்டணிக்கு பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக தற்போது வரை முன்னிலையில் உள்ளது. இதனை தொடர்த்து திமுக மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் தற்போது பீளமேடு பகுதியில் அனைத்து பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கி வருகின்றார். திமுக வெற்றி உறுதி செய்யபட்டு விட்டது என பொதுமக்களிடம் கூறி வருகிறார்.
தர்மபுரி செட்டிக்கரை அரசு பொறியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. தற்போது 12.30 மணி நிலவரப்படி, 5வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் சௌமியா அன்புமணி 1,07,648 வாக்குகள் பெற்று முதல் இடத்திலும், திமுக வேட்பாளர் 89, 964 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், அதிமுக வேட்பாளர் 70, 815 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார்.
Sorry, no posts matched your criteria.