India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை 9வது சுற்று முடிவு அறிவிக்கப்பட்டது. இதன்படி ஆ.இராசா (திமுக) 2,39,320 வாக்குகள் பெற்றார்.எல்.முருகன் (பாஜக) 1,22,213, லோகேஷ் தமிழ்செல்வன் (அதிமுக) 1,04,202, ஜெயக்குமார் (நாதக) 27,318 வாக்குகள் பெற்றுள்ளனர். 9வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் ஆ ராசா 1,17,107 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
கோவையில் திமுக வெற்றி பெற்றால் அனைவருக்கும் ஆடு பிரியாணி போடபடும் என்று திமுகவினர் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், தற்போது திமுக வெற்றியடையும் தருவாயில் உள்ளது இதனை கொண்டாடும் வகையில் தற்போது, கோவை கோட்டைமேடு பகுதியில் இரண்டு ஆடுகளுடன், ஆட்டுக்கறி பிரியாணி வழங்கி திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மக்களவை தொகுதியில் 7வது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில், திமுக வேட்பாளர் 1,72,043 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். தேமுதிக வேட்பாளர் 67,728 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளார். பாஜக வேட்பாளர் 54,399 வாக்குகள் பெற்றுள்ளார். நாதக வேட்பாளர் 43,832 வாக்குகள் பெற்றுள்ளார். மொத்தம் 1,04,315 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை வகிக்கிறது.
நாகப்பட்டினம் மக்களவை தொகுதியில் 8வது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளது. சிபிஐ வேட்பாளர் செல்வராஜ் 24,588 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் 13,635 வாக்குகள் பெற்றுள்ளார். 6 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 8 சுற்றுகள் முடிவில் மொத்தம்
சிபிஐ வேட்பாளர் 19,8079 வாக்குகள் பெற்றுள்ளார். 84,314 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மொத்த வாக்குகள் இன்று மதியம் 2 மணி நேர நிலவரப்படி 9-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திமுக கூட்டணி சார்பில் மதிமுக – துரை வைகோ – 2,23,921, அதிமுக – கருப்பையா – 97,796, அமமுக – செந்தில்நாதன் – 48,339, நா.த.க – ராஜேஷ் – 43,983, 1,26,125 வாக்குகள் வித்தியாசத்தில் துரை வைகோ தொடர்ந்து முன்னிலை வகுத்து வருகிறார்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 11 வது சுற்றில் திமுக கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.பாலு 2,95,576 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 1,11,215 வாக்குகளும், பாஜக கூட்டணி தமாக வேட்பாளர் வேணுகோபால் 75,017 வாக்குகளும், நாதக வேட்பாளர் 58,093 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 1,84,361 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் கனிமொழி கருணாநிதி தொடர்ந்து இரண்டரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவரை அவரது இல்லத்தில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் உள்ளிட்டோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றி உறுதியாகியுள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை. கனிமொழி 4,25.178 வாக்குகளைப் பெற்றுள்ளார். கனிமொழியை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் 1,27,222 வாக்குகள் பெற்றுள்ளார்.
ஈரோடு மக்களவை தொகுதியில் 4வது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில், திமுக வேட்பாளர் பிரகாஷ் 1,14,466 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அசோக்குமார் 67,423 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளார். நாதக வேட்பாளர் 17,762 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தில் உள்ளார். தமாகா வேட்பாளர் விஜயகுமார் 14,698 வாக்குகள் பெற்றுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய ஆரணி தொகுதியின் 6 ஆவது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில், திமுக – 1,36,769 வாக்குகளும், அதிமுக – 81,682 வாக்குகளும்,
பாமக – 71,059 வாக்குகளும், நாதக- 19,783 வாக்குகளும் பெற்றுள்ளன. ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 6 வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் எம் எஸ் தரணிவேந்தன் 55,087 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
Sorry, no posts matched your criteria.