Tamilnadu

News June 4, 2024

திருச்சி மக்களவைத் தொகுதியின் 2.30 மணி நிலவரம்!

image

திருச்சி மக்களவைத் தொகுதியில், 2.30 மணி நேர நிலவரப்படி எண்ணப்பட்ட மொத்த வாக்குகள் விவரம்:

10 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதன்படி,

மதிமுக – துரை வைகோ – 2,62,511

அதிமுக – கருப்பையா – 1,09,762

அமமுக – செந்தில்நாதன் – 55,547

நா.த.க – ராஜேஷ் – 49759

1,52,749 வாக்குகள் வித்தியாசத்தில் துரை வைகோ தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

News June 4, 2024

9 ஆவது சுற்றில் 45151 வாக்குகள் பெற்று முன்னிலை

image

திருவண்ணாமலை பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 8 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் 9 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் திமுக வேட்பாளர் 245151 வாக்குகள், அதிமுக வேட்பாளர் 128567 வாக்குகள், பாஜக வேட்பாளர் 70423 வாக்குகள், நாதக வேட்பாளர் 34910 வாக்குகள் பெறறுள்ளனர். இதில் திமுக வேட்பாளர் சி.என் அண்ணாதுரை தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

News June 4, 2024

அதிமுக வேட்பாளர் தொடர் பின்னடைவு

image

2024 ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேனி நாடாளுமன்றத் பகுதியில் திமுக சார்பாக தங்க தமிழ்ச்செல்வன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். மேலும், டிடிவி தினகரன் 2அவது இடத்திலும், அதிமுக வேட்பாளர் நாராயணசாமி தொடர்ந்து 3ஆவது இடத்தில் வருகின்றனர்.

News June 4, 2024

மத்திய சென்னை: 2 மணி நிலவரம்!

image

மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில், 2 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் 1,37,318 வாக்குகள் பெற்று ஏறுமுகத்தில் உள்ளார். பாஜக வேட்பாளரான வினோஜ் பி.செல்வம் 64,269 வாக்குகள் பெற்று 2 ஆவது இடத்தில் உள்ளார். 23,544 வாக்குகளுடன் தேமுதிக வேட்பாளர்(அதிமுக கூட்டணி) 3 ஆவது இடத்தில் உள்ளார்.

News June 4, 2024

தர்மபுரி: சௌமியா அன்புமணி தொடர்ந்து முன்னிலை

image

தர்மபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. தற்போது 2:30 மணி நிலவரப்படி, வாக்கு எண்ணிக்கையில் மொத்தம் 24 வேட்பாளர்களில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி 2,56,828 வாக்குகள் பெற்று முதல் இடத்திலும், திமுக வேட்பாளர்  1,96,064 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், அதிமுக வேட்பாளர் 1,79,410 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார்.

News June 4, 2024

பதினோராவது சுற்று முன்னிலையில் திமுக

image

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு: 11வது சுற்றில் காங்., வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 76,598 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். காங், – 2,50,015, பாஜக – 1,73,417, நாதக – 48,395, அதிமுக – 44,786 11ம் சுற்று முடிவில் அதிமுக தொடர்ந்து 4ம் இடத்தில் உள்ளது. இதுவரை எண்ணிய மொத்த வாக்குகள்: 5,42,597

News June 4, 2024

கடலூர் 11-வது சுற்று முடிவு

image

கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 11ஆவது சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸ் -2,75,851, தேமுதிக -1,68,560, பாமக -1,24,704. 1,07,291 வாக்குக்கள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் முன்னிலை

News June 4, 2024

விளவங்கோடு: 11ஆவது சுற்று முடிவுகள்

image

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் சுற்று-11 முடிவுகள்

காங்கிரஸ் வேட்பாளர். தாரகை கத்பட்-
மொத்தம்=51,728

பாஜக வேட்பாளர். நந்தினி.
மொத்தம்=25,959

அதிமுக வேட்பாளர் ராணி.
மொத்தம்=2,824

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்.ஜெமினி-மொத்தம்=3,990

இதில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் 25,769 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை

News June 4, 2024

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் 

image

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் 12 சுற்று முடிவுகள் அறிவிக்கப் பட்டுள்ளது. முதல் சுற்றில் இருந்து தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னிலை பெற்று வருகிறது. வேட்பாளர் சு. வெங்கடேசன் கூறியதாவது: 2 லட்சம் வித்தியாசத்தில் கடந்த முறையை விட கூடுதல் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்வார்கள் என நம்புகிறோம். மீடியாக்கள் சொன்ன உண்மையை, இன்றைக்கு வாக்காளர்கள் தவிர்த்துள்ளார்கள் என்றார். 

News June 4, 2024

மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் வேட்பாளர்

image

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குகள் தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ண படுகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையில் நாம் தமிழர் கட்சி ஐந்து சுற்றுக்கள் வரை நான்காவது இடத்தில் இருந்தது. ஆறாவது சுற்று வடிவில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை விட 80 வாக்குகள் அதிகம் பெற்று மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

error: Content is protected !!