Tamilnadu

News June 4, 2024

சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குகள் வெளியீடு

image

தென்காசி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சட்டமன்றத் தொகுதி வாரியாக ராஜபாளையத்தில் 81558 வாக்குகள், ஸ்ரீவில்லிபுத்தூரில் 77789வாக்குகள், சங்கரன்கோவிலில் 85404வாக்குகள், வாசுதேவநல்லூரில் 83602வாக்குகள், கடையநல்லூரில் 80719 வாக்குகள், தென்காசியில் 86057 வாக்குகள் இன்று மாலை நிலவரப்படி பதிவாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

News June 4, 2024

BREAKING: தூத்துக்குடியில் கனிமொழி வெற்றி உறுதி

image

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி 4,25,178 வாக்குகள் பெற்றுள்ளார். இதில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி 1,27,222, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜயசீலன் 92076 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரெவீனா ரூத் ஜேன் 88,884 வாக்குகளும் பெற்றுள்ளனர். எண்ணப்பட வேண்டிய வாக்குகளை விட கனிமொழி வாக்குகள் அதிக வித்தியாசத்தில் உள்ளதால் அவர் வெற்றி உறுதியானது.

News June 4, 2024

கடலூர் 15-வது சுற்று முடிவு

image

கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 15ஆவது சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸ் -3,74,529, தேமுதிக -2,24,741, பாமக -1,69,122. 1,49,788 வாக்குக்கள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் முன்னிலை

News June 4, 2024

மதுரையில் உறுதியானது வெற்றி..!

image

மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை 16 சுற்றுக்கள் முடிவடைந்த நிலையில் எண்ணப்பட வேண்டிய வாக்குகளின் எண்ணிக்கையை விட மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் முன்னிலை பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதால் சு.வெங்கடேசனின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. 16 சுற்று முடிவில் சு.வெங்கடேசன் 1லட்சத்தி 76ஆயிரத்தி 536 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

News June 4, 2024

கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் முன்னிலை

image

கிருஷ்ணகிரியில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் – 177710 ஓட்டுகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். இரண்டாவது இடத்தில் அதிமுக 112195 ஓட்டுகளும், பாஜக – 86562 ஓட்டுகள் பெற்று மூன்றாவது இடத்திலும், நாதக- 36832 ஓட்டுகள் பெற்று நான்காவது இடத்திலும் உள்ளது.

News June 4, 2024

கரூரில் தொடரும் பின்னடைவு

image

கரூர் மக்களவைத் தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் 12-வது சுற்று முடிவுகளில், திமுக கூட்டணி (காங்கிரஸ்) :311320, அதிமுக / கூட்டணி (அதிமுக) :222381, வாக்குகள் பெற்றுள்ளனர். அதிமுக வேட்பாளர் தங்கவேளை விட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி 88,939 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.இந்நிலையில் அதிமுக வேட்பாளர் தங்கவேல் கடும் பின்னடைவை சந்தித்திருக்கிறார்.

News June 4, 2024

பாரிவேந்தர் தொடர் பின்னடைவு

image

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் திமுக வேட்பாளர் கே.என் அருண் நேரு 3,90,601 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். இத்தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாரிவேந்தர் 13ஆவது சுற்றில் 1,05,124 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். மேலும், வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

News June 4, 2024

16 ஆயிரம் வாக்குகள் பெற்ற நோட்டா

image

திண்டுக்கல் தொகுதி வாக்கு எண்ணிக்கை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்று வருகிறது. பாராளுமன்ற தொகுதியில் முன்னணி கட்சிகள் உட்பட 15 பேர் போட்டியிட்டனர். இந்நிலையில் 16 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், சுயேச்சை வேட்பாளர்களை விட 16 ஆயிரத்து 202 வாக்குகள் பெற்று நோட்டா முன்னிலையில் உள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் நோட்டா அதிக வாக்குகள் வாங்கிக் கொண்டு வருகிறது.

News June 4, 2024

திண்டுக்கல்: 16வது சுற்றிலும் வேகம்

image

திண்டுக்கல் தொகுதி வாக்கு எண்ணிக்கை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் 16வது சுற்று நிறைவடைந்தது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் சச்சிதானந்தம்-5,00,825,
எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகம்மது முபாரக்-1,70,217,
பாமக வேட்பாளர் திலகபாமா -80,399, நாதக வேட்பாளர் கயிலை ராஜன்-72,401 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் 3,30,000 வாக்கு வித்தியாசத்தில் சச்சிதானந்தம் முன்னிலை வகிக்கிறார்.

News June 4, 2024

திருவண்ணாமலை பாராளுமன்ற தேர்தல் 9 வது சுற்று

image

திருப்பத்தூர் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய திருவண்ணாமலை பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் 9 ஆவது சுற்று நிலவரம் வெளியாகியுள்ளது. இதில், திமுக வேட்பாளர் 245151 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் 128567 வாக்குகளும்,
பாஜக வேட்பாளர் 70423 வாக்குகளும், நாத வேட்பாளர் 34910 வாக்குகள் பெற்று உள்ளன. இதன்படி
திமுக வேட்பாளர் சி.என் அண்ணாதுரை தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

error: Content is protected !!