Tamilnadu

News June 4, 2024

தர்மபுரி : 18ஆவது சுற்று முடிவு

image

தர்மபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. தற்போது 3:50மணி நிலவரப்படி, வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் ஆ. மணி 3,61,082, வாக்குகள் பெற்று முதல் இடத்திலும், பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் சௌமியா அன்புமணி 3,43,883 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், அதிமுக வேட்பாளர் 2,40,914 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார்.

News June 4, 2024

திருவண்ணாமலை 10 ஆவது சுற்று நிலவரம்

image

திருப்பத்தூர் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியின் 10 ஆவது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், திமுக வேட்பாளர் 271814 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் 142753 வாக்குகளும், பாஜக வேட்பாளர் 78681 வாக்குகளும்,
நாத வேட்பாளர் 38553 வாக்குகளும் பெற்றுள்ளனர். தொடர்ந்து திமுக வேட்பாளர் சி.என் அண்ணாதுரை 129061 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

தென்காசியில் தொடர் பின்னடைவு

image

தென்காசி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை இன்று தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தற்போது 3.10 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீ குமார் 240533, அதிமுக வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி 124703, பாஜக வேட்பாளர் ஜான் பாண்டியன் 114069, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இசை மதிவாணன் 68326 வாக்குகளை பெற்றுள்ளனர்.அதிமுக வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி கடும் பின்னடைவை சந்தித்து வருகிறார்.

News June 4, 2024

மூன்று லட்ச வாக்குகளை தாண்டிய இந்திய கூட்டணி வேட்பாளர்

image

திருநெல்வேலியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவை பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) அரசு பொறியல் கல்லூரியில் எண்ணப்பட்டு வருகின்றது. இன்று காலை முதல் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையின் 14வது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 3,20,534 வாக்குகள் பெற்றுள்ளார். இதன் காரணமாக வேட்பாளர் ராபர்ட் புரூஸ் வெற்றி உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

News June 4, 2024

கடலூர் 16-வது சுற்று முடிவு

image

கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 16ஆவது சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸ் -4,00,842, தேமுதிக -2,41,415, பாமக -1,80,874.1,59,427 வாக்குக்கள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் முன்னிலை

News June 4, 2024

நெல்லையில் டெபாசிட் இழக்கும் அதிமுக

image

திருநெல்வேலி பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட்டு வருகின்றது. இதில் 13வது சுற்று நிலவரப்படி அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி 52952 வாக்குகள் பெற்றுள்ளார். இவ்வாறு நிலைமை நீடித்தால் அதிமுக டெபாசிட் இழக்க நேரிடும். டெபாசிட் பெற குறைந்தபட்சம் 1,76,000 ஓட்டுகள் பெற வேண்டும்.

News June 4, 2024

வாக்கு எண்ணிக்கை 13வது சுற்று முடிவின் நிலவரம்

image

திருநெல்வேலியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவை பொதுத்தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை இன்று (ஜூன் 4) அரசு பொறியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இன்று காலை முதல் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் 13வது சுற்றின் முடிவில் இந்திய கூட்டணி வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 81861 வாக்குகள் முன்னிலை வகிக்கின்றார். பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 2,04,893 வாக்குகள் பெற்றுள்ளார்.

News June 4, 2024

வாக்கு எண்ணிக்கையில் மந்தம்

image

நாகை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை காலை முதலே மிகவும் மந்தமான முறையில் நடைபெற்று வருகிறது. இதுவரை 15 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்ற நிலையில், மீதமுள்ள சுற்றுகள் எண்ணும் பணி துவங்கி உள்ளது. ஏற்கனவே எண்ணிய சுற்றுக்களில் குளறுபடி இருப்பதால் மூன்று பெட்டிகள் மீண்டும் மறுமுறை எண்ணப்படுகிறது.

News June 4, 2024

தஞ்சாவூரில் 11வது சுற்று நிலவரம்

image

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 11வது சுற்று முடிவடைந்த நிலையில் திமுக முன்னிலையில் உள்ளது. திமுக – 2,69,409, தேமுதிக – 1,01,686, பாஜக – 89,235, நாத – 66,326, 1,67,723 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் முரசொலி முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

பெரம்பலூர்: 2,73,790 வாக்குகள் முன்னிலை

image

பெரம்பலூர் மக்களவை தொகுதியில் 14வது சுற்றுகள் முடிவடைந்த நிலையில், திமுக வேட்பாளர் அருண் நேரு தொடர்ந்து 4,22,495 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் 14,8705 வாக்குகள் பெற்று 2ஆம் இடம் பிடித்துள்ளார். ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் 1,12,556 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் தேன்மொழி 78778 வாக்கு பெற்றுள்ளார்.

error: Content is protected !!