Tamilnadu

News June 4, 2024

ஸ்ரீபெரும்புதூர்: டி.ஆர்.பாலு முன்னிலை

image

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வது 22 சுற்றில் திமுக கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.பாலு 5,76,911 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 2,10,260 வாக்குகளும், பாஜக கூட்டணி தமாக வேட்பாளர் வேணுகோபால் 1,53,509 வாக்குகளும், நாதக வேட்பாளர் 1,07,226 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் டி ஆர் பாலு 3,66,651 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்ற நாதக வேட்பாளர்

image

தென்காசி மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று முடிவு பெறும் நிலையில் மாலை 5.20 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீ குமார் 378795, அதிமுக வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி 203271, பாஜக வேட்பாளர் ஜான் பாண்டியன் 179158, நாதக வேட்பாளர் இசை மதிவாணன் 113994 வாக்குகளை பெற்றுள்ளனர். இதில் நாதக வேட்பாளர் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளார்.

News June 4, 2024

கடலூர் 20-வது சுற்று முடிவு

image

கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 19ஆவது சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸ் -4,48,316, தேமுதிக -2,66,785, பாமக -2,01,480.1,81,531 வாக்குக்கள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் முன்னிலை

News June 4, 2024

வேலூர் 1,64,967 வாக்குகள் திமுக முன்னிலை

image

5.20 மணி நிலவரப்படி வேலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் 4.02,688 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பா.ஜ.க வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 2,37,721 வாக்குகள் பெற்று 2 ஆம் இடத்திலும், அ.தி.மு.க வேட்பாளர் பசுபதி 79,138 வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தில் உள்ளனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 33,949 வாக்குகள் பெற்று 4 ஆம் இடத்தில் உள்ளனர்.

News June 4, 2024

திண்டுக்கல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றி

image

2024 மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட திமுக – சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 634729 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களம் கண்ட அதிமுக – எஸ்டிபிஐ வேட்பாளர் முகமது முபாரக் 214134 வாக்குகளும், பாஜக – பாமக வேட்பாளர் திலகபாமா 105898 வாக்குகளும், நாதக வேட்பாளர் கயிலைராஜன் 93265 வாக்குகளும் பெற்று தோல்வியைத் தழுவினர்.

News June 4, 2024

திருவள்ளூர் தொகுதியில் திமுக கூட்டணி வெற்றி

image

2024 மக்களவைத் தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக கூட்டணியை சேர்ந்த காங். வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 6,46,457 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களம் கண்ட பாஜக வேட்பாளர் பால கணபதி 1,83,798 வாக்குகள் பெற்று 2 ஆம் இடம் பிடித்துள்ளார்.

News June 4, 2024

காணாமல் போனவர் இறந்த நிலையில் மீட்பு

image

பொன்னேரி அடுத்த பழவேற்காடு திருமலை நகரை சேர்ந்த மீனவர் பிரேம்குமார் கடந்த மாதம் 31ஆம் தேதி கடலில் தவறி விழுந்து காணாமல் போனார். இந்நிலையில் இன்று L&T கம்பெனி அருகில் காணாமல் போன பிரேம்குமாரின் உடல் ஒதுங்கி இருப்பதாக திருப்பாலைவனம் போலீசாருக்கு கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவம் இடம் சென்ற போலீசார் உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

News June 4, 2024

கன்னியாகுமரி: காங்கிரஸ் வெற்றி

image

2024 மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட திமுக – காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 376967 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களம் கண்ட பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் 241464 வாக்குகளுடன் இரண்டாம் இடம் பிடித்தார்.

News June 4, 2024

64,674 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை

image

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் தற்போது விழுப்புரம் அரசு கலை கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகிறது. இதில் 17 ஆம் சுற்று முடிவில் விசிக – 3,89,159, அதிமுக – 3,24,476, பாமக – 1,50,188, நாம் தமிழர் – 47,958 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் விசிக வேட்பாளர் ரவிக்குமார் 64,674 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

தஞ்சாவூரில் திமுக 2,91,501 வாக்குகள் முன்னிலை

image

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை காலை தொடங்கி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 19வது சுற்றுகள் முடிவடைந்த நிலையில் திமுக முன்னிலையில் உள்ளது. திமுக – 4,61,662, தேமுதிக – 1,70,161,பாஜக- 1,59,652, நாத- 1,09,582, 2,91,501 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் முரசொலி முன்னிலையில் உள்ளார்.

error: Content is protected !!