India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பழனி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் இன்று வந்தனர். தீர்த்த காவடி எடுத்து வந்தவர்கள் மலை மீது அமர்ந்து பிரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து எடுத்து வந்த தீர்த்தத்தை முருகனுக்கு செலுத்தி வழிபட்டனர். பக்தர்கள் வருகையால் மலைக்கோயில் நிரம்பி காணப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த ச.எல்சி என்பவர் சுயேட்சையாக இன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர் ஏற்கனவே உடுமலை சட்டமன்ற தொகுதிக்கும், 1996 , 2001, 2006 ஆண்டுகளில் உடுமலை நகர மன்ற தலைவருக்கும் போட்டியிட்டுள்ளார். மேலும், இவர் மக்கள் நீதி மய்யம் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் குரு என்பவரின் தாயார் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை வண்ணாரப்பேட்டை பேசின் பிரிட்ஜ் மண்டலம் ஐந்து அலுவலகத்தில் இன்று அனைத்து கட்சிகளும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதை தொடர்ந்து திமுக கட்சி சார்பாக வடசென்னையில் போட்டியிடும் கலாநிதி வீராசாமி வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி கட்டா ரவி தேஜாவிடம் வழங்கினார் இந்நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர் ஆர் டி சேகர், எம் எல் ஏக்கள் தாயகம் கவி ஐட்ரீம் மாதவரம் சுதர்சனம் ஆகியோர் உடன் இருந்தனர்.
சென்னை வண்ணாரப்பேட்டை பேசின் பிரிட்ஜ் மண்டலம் ஐந்து அலுவலகத்தில் இன்று அனைத்து கட்சிகளும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதை தொடர்ந்து நாம் தமிழர் கட்சி சார்பாக வடசென்னையில் நிற்கும் டாக்டர் அமுதா வாணி வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி கட்டா ரவி தேஜாவிடம் வழங்கினார். இந்நிகழ்வில் வடசென்னை மாவட்ட செயலாளர் கோகுல் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் உடன் இருந்தனர்.
புதுச்சேரி பாராளுமன்றத் தேர்தல் முன்னிட்டு இன்று அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். உடன் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், அதிமுக காரைக்கால் மாவட்ட செயலாளர் ஓமலிங்கம் , எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில தலைவர் முகமது பக்ருதீன் ஆகியோர் உள்ளனர்.
புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா அவர்கள் இன்று புதுச்சேரி வழுதாவூர் ரோட்டில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக வந்தனர். இதனையடுத்து புதுச்சேரி
தேர்தல் அதிகாரியும் மாவட்ட கலெக்டருமான குலோத்துங்கன் அவர்களிடம் மேனகா அவர்கள் இன்று மனு தாக்கல் செய்தார்.
புதுவை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி
வேட்பாளர் தமிழ்வேந்தன் மாநில அதிமுக கழக செயலாளர் அன்பழகன் Ex-M.L.A.
முன்னிலையில் வேட்புமனு தாக்கல் இன்று செய்தார்.அப்போது
மாநில அம்மா பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கர்,
உழவர்கரை நகர கழக செயலாளர் சித்தானந்தம் மற்றும் முன்னாள் தொகுதி செயலாளர் தமிழ்செல்வன் உடன் இருந்தனர்.
சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி பூலாவரியில் மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நினைவு இடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரபு, மாவட்ட துணைச் செயலாளர் சுரேஷ்குமார், திமுக பொதுக்குழு உறுப்பினர் மலர்விழி, வீரபாண்டி ஒன்றிய செயலாளர் வெண்ணிலா சேகர், கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் மோகன் என பலர் கலந்து கொண்டனர்
2024 மக்களவை தேர்தலையொட்டி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகள் (VVPAT) ஆகியவற்றை சட்டமன்றத் தொகுதி வாரியாக பிரிக்கும் பணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் இப்பணியினை ஆய்வு செய்தனர்.
திண்டிவனம் தீர்த்தகுளத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் மனைவி கௌசல்யா, மாமியார் பாக்கியலட்சுமியுடன் நேற்று (மார்ச் 24) பைக்கில் விக்கிரவாண்டி அருகே சென்று கொண்டிருந்தார். வழியில் எதிர்பாராமல் வேன் மோதி 3 பேரும் படுகாயமடைந்தனர். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் பாக்கியலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.