Tamilnadu

News March 26, 2024

படகில் சென்று வாக்காளர் விழிப்புணர்வு

image

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம் பெரியதாழையில் நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் படகில் சென்று நடுக்கடலில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் படகில் மகளிர் சுய உதவி குழுவினர் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விளக்கும் பதாகைகளை பிடித்தபடி கோஷங்களை முழங்கினர்.

News March 26, 2024

திமுக செயல்வீரர்கள் கூட்டம்; ஆய்வு செய்த மாவட்ட பொருளாளர்

image

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் இன்று நடைபெற இருக்கும் திமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.கூட்டத்திற்கான அரங்க அமைப்புகளை கடலூர் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் எம் ஆர் கே பி கதிரவன் நேற்று இரவு ஆய்வு செய்தார்.உடன் பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன்,புவனகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் மனோகரன்,பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் கலையரசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

News March 26, 2024

உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்

image

சேத்துப்பட்டில் நேற்று மாலை சேத்பட் நான்குமுனை சாலை சந்திப்பில் தி.மு.க கழக இளைஞர் அணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆரணி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் M.S.தரணிவேந்தனுக்கு வாக்கு அளிக்குமாறு தேர்தல் பிரச்சாரம் செய்தார். இதில் ஏராளமான கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

News March 26, 2024

வாணியம்பாடி அருகே தங்க நகை பறிப்பு

image

வாணியம்பாடி அருகே சென்னை பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் ஆரிப் அஹ்மத் தனது தங்கை தஸ்மியா உடன் நேற்று (மார்ச்.25) இரவு செல்லும் போது பின்னால் வந்த மர்ம நபர்கள் 4 கிராம் தங்க நகை,1 செல்போன் மற்றும் ரூ.17 ஆயிரம் வைத்திருந்த கை பையை பிடிங்கிச் சென்றனர்.இதனால் நிலை தடுமாறி கீழ விழுந்ததில் இருவரும் காயமடைந்தனர். இது குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 26, 2024

வேடசந்தூர் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

image

வேடசந்தூர்-ஒட்டன்சத்திரம் சாலையில் சீத்தமரம் நான்கு வழி சாலையில் தேர்தல் பறக்கும்படை அலுவலர்கள் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டனர். பழனியிலிருந்து வேடசந்தூர் நோக்கி வந்த காரை ஆய்வு செய்ததில் ரூ.1 லட்சம் பணம் இருப்பது கண்டறியப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

News March 25, 2024

வேலூர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனு தாக்கல்

image

மக்களவைத் தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மகேஷ் ஆனந்த் இன்று (மார்ச் 25) வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சுப்புலட்சுமியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News March 25, 2024

ஒட்டன்சத்திரம்: மார்ச் 31ல் இலவச முகாம்

image

ஒட்டன்சத்திரம் தும்மிச்சம்பட்டி ரோடு பழனியப்பா திருமண மஹாலில் ஒட்டன்சத்திரம் எலைட் ரோட்டரி சங்கம் மதுரை மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை,
மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் வருகின்ற மார்ச் 31ஆம் தேதி  நடைபெறுகிறது. முகாமிற்கு ஆதார் நகல் அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகலில் தங்களது தொலைபேசி எண் எழுதி வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

News March 25, 2024

ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று அரக்கோணம் மக்களவை தேர்தலில் பதட்டமான மற்றும் மிகவும் பதட்டமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள நுண் பார்வையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.

News March 25, 2024

பேளூரில் மயில் வாகனத்தில் திருவீதி உலா வந்த வள்ளி தெய்வானை சமேத முருகன்

image

வாழப்பாடி அருகே பிரசித்தி பெற்ற பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு, பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. இதனையடுத்து, மயில் வாகனத்தில், சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை உற்சவமூர்த்திகள் திருவீதி உலா வந்தனர். ராஜ வீதிகளில் பக்தர்கள் தாம்பூலம் கொடுத்து வரவேற்பு அளித்து வழிபாடு செய்தனர்.

News March 25, 2024

ஈரோடு மாவட்டத்தில் நாளை 166 மையங்களில் தேர்வு

image

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (26ம் தேதி) துவங்கி, ஏப்ரல் 8ம் தேதி நிறைவடைகிறது. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவ-மாணவிகள் 25,663 பேரும், தனி தேர்வர்கள் 1,159 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தேர்வு எழுத 116 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என ஈரோடு மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!