India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மாவட்டம் டோல்கேட் செக்போஸ்ட் அருகே வசிப்பவர் பாஸ்கர் திருமணம் ஆகவில்லை இவர் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். தொழில் நஷ்டம் ஏற்பட்டதால் மனம் உடைந்த பாஸ்கர் நேற்று விஷம் அருந்தியுள்ளார். இவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து இவரது தாய் செல்வி புலிவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பில் உள்ள 420க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளில் பி.இ, பிடெக் போன்ற இளநிலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை தமிழக உயர்கல்வித்துறை சார்பில் தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தால் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று(ஜூன் 6) நிறைவு பெறுகிறது. விண்ணப்பிக்காதவர்கள் தவறாமல் விண்ணப்பிக்கவும்.
மதுரை மக்களவை தொகுதியில் 4,28,204 வாக்குகள் பெற்று சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் வெற்றியை பெற்றுள்ளார். அவருக்கு பின் 2வது இடத்தை 2,18,705 வாக்குகள் பெற்று பாஜகவின் ராம ஸ்ரீனிவாசன் பிடித்துள்ளார். அதிமுக வேட்பாளர் சரவணன் 2,03,891 வாக்குகள் பெற்று 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதிமுக 3 இடத்திற்கு தள்ளப்பட அதிமுகவில் உட்கட்சி பூசல் முக்கிய காரணம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கெப்பிலிங்கம்பட்டியில் இருந்து விருதுநகர் செல்லும் சாலையில் ரயில்வே கீழ் பாலம் அமைந்துள்ளது. இவ்வழியாக 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் விருதுநகருக்கு தினசரி வேலைக்கு சென்று வருகின்றனர். தற்போது பெய்த மழையினால் பாலத்தின் கீழ் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிகோட்டை சந்தோச நாடார் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் வரும் 9 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வு அறையில் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு அனுமதி அட்டையில் தவறுதலாக பிரிண்ட் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே மாணவர்கள் மேற்கூறிய பள்ளியில் தவறாக செல்ல வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டையை மாநகராட்சியாக அறிவித்ததை கண்டித்தும் புதுக்கோட்டை மீண்டும் நகராட்சியாக இருக்க வேண்டும் என்றும் அல்லது பேரூராட்சியாக ஆக்க வேண்டும் என்றும் 11 கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வேண்டாம் மாநகராட்சி வேண்டும் பேரூராட்சி என்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் காவலர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.காவல்துறையினர் அவர்களை கைது செய்து மண்டபத்தில் வைத்துள்ளனர்.
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக மக்கள் நலப் பணி ஆற்றிட கே.நவாஸ்கனிக்கு ஆதரவு அளித்த மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தென்மண்டல இளைஞரணி துணை அமைப்பாளர் அன்சாரி தலைமையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இளைஞரணியினர் நகர் பகுதியில் பல இடங்களில் ப்ளக்ஸ் பேனர் வைத்து நன்றி தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் வரும் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையொட்டி நெல்லையில் உள்ள பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள நெல்லை முதன்மை கல்வி அலுவலர் முத்துசாமி உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் நெல்லை, பாளையங்கோட்டை பகுதிகளில் உள்ள பள்ளிகளில் முன்னேற்பாடு பணிகள் இன்று (ஜூன் 6) தீவிரமாக நடந்து வருகிறது.
பெரம்பலூர் அருகே தனியார் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் சாதனை படைத்துள்ளனர். கடந்த ஜூன் 4 அன்று நீட் தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து அப்பள்ளி மாணவர் முகுந்தன் 635 மதிப்பெண்களும்ம், மாணவி நவீனா 566 மதிப்பெண்களும் பெற்றும் சாதனைப் படைத்துள்ளனர். இதையடுத்து கல்வி குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான வரதராஜன் உட்பட தாளாளர், ஆசிரியர்கள் என அனைவரும் தங்கள் வாழத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு வட மாநிலத்தை சேர்ந்த ஷேக் மயூம் ஆலம்(40) என்பவர் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இன்று வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது திடீரென அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தார். தொடர்ந்து, மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.