India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, திருவாரூா் மாவட்டத்தில், தோ்தல் தொடா்பான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருவாரூரில், பதற்றமான வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள், அடிப்படை வசதிகள் குறித்து திங்கள்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதிக்கு, கருஞ்சிறுத்தை மக்கள் இயக்கம் சார்பாக நிறுவனர் அதிசய பாண்டியன் கருப்பு சட்டை அணிந்து, நெல்மணியை மாலையாக கோர்த்து, கழுத்தில் பச்சை துண்டுடன், மாட்டு வண்டியில் ஊர்வலமாக வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (மார்ச் 26) காலை வந்தார். இதனால் கொக்கிரகுளம் சிக்னல் அருகே பரபரப்பு நிலவியது.
கோவை நாடாளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் இதற்கு முன் இருந்த எம்பி யாரும் பார்த்ததில்லை. கோவை தொகுதியில் உரிமைகளை கேட்டு பெற வலிமையான வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என பேசினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அதிமுக ஒன்றிய பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயளாலர் அய்யப்பா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தேர்தல் பொறுப்பாளர் பிரபு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காமராஜ், மருத்துவர் பொன்னரசு மற்றும் தியாகதுருகம் மேற்கு ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயம் 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படும் மிகவும் பிரசித்திபெற்றதாகும். இக்கோயிலில் முக்கிய நிகழ்வான பங்குனித் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் தாமரைகுளம் ஊராட்சியில் உள்ள பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத உள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இன்று (26.3.2024) ஊராட்சி மன்ற தலைவர் பிரேம்குமார் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். மேலும் மாணவ, மாணவிகள் சிறப்பான முறையில் தேர்வு எழுதி பெரும் மதிப்பெண்களை பெற்று நமது ஊராட்சிக்கு பெருமை சேர்க்கும் படி அவர்களை வாழ்த்தினார்.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் தொடர்ந்த வழக்கு, தூத்துக்குடியில் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை இன்று வந்த பொழுது நீதிபதி வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் ஐந்தாம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
தென்காசி மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் உள்ள ஜான்பாண்டியன் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வருகிற 4-ம் தேதி வியாழக்கிழமை தென்காசி மக்களவைத் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் என பாஜக மாநில தலைமை அறிவித்துள்ளது. அதற்கான பிரச்சார ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை உழவர் சந்தையில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு இன்று (26.03.2024) 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்ட சுவரொட்டியினை ஒட்டி, காய்கள் மற்றும் பூக்களை கொண்டு அலங்கரிக்கப்பட்ட கோலத்தினை பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திண்டுக்கல்லில் இந்திய கூட்டணி கட்சி சிபிஎம் நாடாளுமன்ற வேட்பாளர் ஆதரித்து கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று ஆத்தூர் தாலுகா பஞ்சம்பட்டி பகுதியில் பிரச்சாரம் செய்த அமைச்சர் பெரியசாமி தெருவோர தேநீர் கடையில் சிபிஎம் வேட்பாளர் உடன் அமர்ந்து வடை, டீ சாப்பிட்டுட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
Sorry, no posts matched your criteria.