India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடைபெற்று முடிந்த 2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் இந்தியா கூட்டணி திமுக சார்பில் நின்று வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் அமோக வெற்றி பெற்ற கதிர் ஆனந்த் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழியை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று (ஜூன் 6) நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
உடுமலை அடுத்த
ஆண்டியகவுண்டனூர் கிராமம் மேட்டுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் முருகாத்தாள். இவர் ஆடுகளை வளர்த்து பிழைப்பு நடத்திவருகிறார். இந்த நிலையில் நேற்று ஆண்டியகவுண்டனூர் பகுதியில் திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது முருகாத்தாள் வளர்த்து வந்த ஆடு எதிர்பாராத விதமாக இடி தாக்கி பலியானது. இது குறித்து வருவாய்த் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
திருப்பத்தூர் – சிங்கம்புணரி சாலை எம். கோவில்பட்டியில் உள்ள குளோபல் இன்டர்நேஷனல் பள்ளியில் நீட் 2024 தேர்வில் மாணவன் அறிவொளி பிரபாகரன் தேர்வில் 630 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். இரண்டாவது இடத்தில் 585 மதிப்பெண் பெற்று மாணவி சோபியா ஜாஸ்மின், மூன்றாவது இடத்தை 550 மதிப்பெண் பெற்று மாணவன் டேவிட் ஜெயச்சந்திரன் ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் பிரச்சனை குறித்து அனைத்து கட்சி தலைவர்கள் இன்று (ஜூன் 7) மாலை 3 மணிக்கு கலெக்டரை சந்திக்கின்றனர்.
நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை எஸ்டேட்டில் பணியாற்றும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விஆர்எஸ் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனை கண்டித்து நாளை மாலை 3 மணிக்கு மாவட்ட ஆட்சித் தலைவரை அனைத்து கட்சி தலைவர்கள் சந்திக்கின்றனர்.
சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று இரண்டாவது நாளாக மிதமான மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும் தொடர்ந்து இரண்டாவது நாளாக மாலை நேரத்தில் பெய்த மிதமான மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருத்தணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எஸ்.ஜே.புரம் பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் நேற்று ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் கட்டப்பட்டு வரும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் பயனாளிகளின் தேர்வு குறித்து பயனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதில் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.
ஸ்ரீரங்கம் தொகுதி சோமரசன் பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ இல்லத்தில் நேற்று பொதுமக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுவாக அளித்து எம்எல்ஏவிடம் நிறைவேற்றி தரக் கோரிக்கை வைத்திருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட எம்எல்ஏ பழனியாண்டி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.
கூடலூர், தேவர்சோலை, பொன்வயல் கிராமம் சுனில் என்பவரது வீடு அருகே சிறுத்தை பதுங்கி இருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் வேட்டை தடுப்பு காவலர்கள் கவச உடை அணிந்து 3வது நாளாக நேற்று தேடினார்கள். இதற்கிடையில் இளைஞர் ஒருவர் சிறுத்தை அருகே சென்று செல்பி வீடியோ எடுத்து வலைதளங்களில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொள்ளிடம், ஆனைக்காரன்சத்திரம் ஊராட்சி அனுமந்தபுரம் கிராமத்தில் உள்ள அமிர்த குளக்கரையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஊராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது. இதில் கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் உமாசங்கர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு துவங்கி வைத்தார். ஒன்றிய பணி மேற்பார்வையாளர் கவிதா, ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் இதில் பங்கேற்றனர்.
தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் ராணி சி ஸ்ரீகுமார் அவரை எதிர்த்து போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி, மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் ஆகியோரை விட 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் தொடர்ச்சியாக சென்னையில் அவர் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Sorry, no posts matched your criteria.