India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்ட குவாரிகளில், உயர் நீதிமன்ற நீதிபதி மூலம் விசாரணை நடத்தி முறைகேடுகளை கண்டு பிடிக்கப்பட்டால், குவாரி அனுமதியை ரத்து செய்ய வேண்டும். மார்த்தாண்டம் மேம்பாலத்தில் கனிம வள லாரிகள் செல்வதை உடனே தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 11 அன்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி மா.செ அல்காலித் அறிவித்துள்ளார்.
விருதுநகரில் முறைகேடாக வெற்றி பெற்றுள்ள மாணிக் தாகூர் பதவி ஏற்க தடை விதிக்க வேண்டுமென தூத்துக்குடி தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் சதீஷ் தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது. மறு வாக்கு எண்ணிக்கை நடத்த கோரிக்கை விடுத்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று(ஜூன் 06) மாவட்டத்தில் அதிகபட்சமாக 91.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
ஆற்காடு டவுன் போலீஸ் ஸ்டேஷனில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி நேற்று(ஜூன் 6) திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது அவர் கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து ஆற்காடு டவுன் போலீஸ் ஸ்டேஷன் உட்பட்ட பகுதியில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். தலைமறைவு குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என தெரிவித்தார். டவுன் இன்ஸ்பெக்டர் சசிகுமார் உடன் இருந்தார்.
கலசப்பாக்கம், பர்வதமலை , கல்லூரி மாணவர் புவனேஷ் மே-2 பைக்கில் சென்றபோது டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானார். தி.மலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இன்று மூளை சாவு அடைந்தார். பெற்றோர் அனுமதியுடன் சிறுநீரகம், கல்லீரல், கண்விழி தானமாகதரப்பட்டது . மாணவன் உடலுக்கு டீன் தேரணிராஜன் தலைமையில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
பெரம்பலூர் வேளாண் துறை இணை இயக்குநர் கீதா செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது நிலத்தடி நீர் குறைவான இருக்கும் நிலையில் மாவட்டத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் கோடை காலத்திற்கு ஏற்ப பயிர்களை தேர்வு செய்து பயன்பெறலாம். நீர் இன்மையால் பயிர்களை கருதுவதை தடுக்க குறைவான நீர் தேவையுள்ள பயிர்களை பயிர் செய்யலாம் என தெரிவித்துள்ளார்.
மதுரை தல்லாகுளத்தை சேர்ந்தவர் சரவணக்குமார். இவரது வீட்டில் உள்ள தனியார் இணைய சேவை பாக்ஸ் நேற்று பழுது ஏற்பட்டதால் பழுது நீக்க அந்நிறுவனத்தை சேர்ந்த இரு இளைஞர்கள் வந்துள்ளனர். இந்நிலையில் இணைய சேவை பாக்ஸ்-ன் அருகே வைத்திருந்த ஒன்றரை சவரன் நகை மாயமாகியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சரவணக்குமார் இணைய சேவை பழுது நீக்க வந்த அபுதாகீர், கோகுல் ஆகிய இருவர் மீது அளித்த புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் இன்று(07.06.24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்துள்ளது. தருமபுரியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை) ஓரிரு இடங்களில் கனமழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன் நேற்று(ஜூன் 6) மாலை ராயபுரம் ஐட்ரீம் திரையரங்கம் அருகே உள்ள மதுக்கடையில் மது அருந்தி உள்ளார். இவருக்கும் அங்கு குடித்துக் கொண்டு இருந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மணிகண்டன் தலையில் பாட்டிலால் அந்த நபர்கள் குத்தி உள்ளனர். ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே மண்மங்கலம் அடுத்த முடிச்சூர் செல்லும் சாலையில் சிலர் மூட்டை மூட்டையாக குப்பைகளை கொட்டி அங்கே தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் தினந்தோறும் சுவாச பிரச்னையை சந்தித்து வருகின்றனர். எனவே, இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை எழுந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.