India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அதில் அவரது சொத்து மதிப்பு விவரங்களை குறிப்பிட்டுள்ளார். அதில் அவரது பெயரில் அசையும் சொத்து 6.75 கோடியும், அவரது துணைவியார் பெயரில் 3 கோடி இருப்பதாகவும், அசையா சொத்து அவர் பெயரில் 4.48 கோடியும், துணைவியார் பெயரில் 3.13 கோடியும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் போலீசார் மற்றும் பிற மாவட்டத்தில் வாக்கு உரிமை உடைய போலீஸ் அதிகாரிகளுக்கு தேர்தல் பிரிவு சார்பில் தபால் வாக்குப்பதிவு செய்யும் படிவம் வழங்கும் பணி இன்று தொடங்கப்பட்டது. இதில் ஆசிரியர்களுக்கு, அரசு அலுவலர்களுக்கும் சம்பந்தப்பட்ட துறைகளின் சார்பில் தபால் வாக்குச்சீட்டு படிவம் வழங்கப்பட உள்ளது.
மதுரை மாநகரில் இறுதி ஊர்வலத்தின்போது போக்குவரத்து மிகுந்த முக்கிய சாலைகளில் செல்வதை தவிர்க்க வேண்டும், இறுதிச் சடங்கில் அனுமதியின்றி பேனர் நிறுவக்கூடாது, மலர்வளையம், பூமாலைகள் சாலை, வாகனங்களின் மீது தூவக்கூடாது உள்ளிட்ட நடைமுறைகளை மீறி மக்களின் பாதுகாப்பிற்கும், உயிருக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் 16ஆவது அனைத்து இந்திய காவல்துறை இறகுபந்து போட்டி நடைபெற்றது. 29 மாநிலத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் பங்கேற்ற இப்போட்டியின் தமிழக அணி சார்பாக மதுரை மாநகர
ஆள்கடத்தல், மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ஹேமமாலா தங்கப்பதக்கம் வென்றார். காவல் ஆய்வாளரை மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் இன்று நேரில் அழைத்து பாராட்டினார்.
நீலகிரி, கூடலூர், தோட்டமூலா, ஏலுமரம் பகுதியை சேர்ந்தவர் விஜயன். இவர் இன்று (மார்ச் 26ம் தேதி) காலை 8.20 மணிக்கு மாரடைப்பு காரணமாக கூடலூர் (GTMO) மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என நீலகிரி காவல் துறை அறிவித்து உள்ளது. மேலும் இவரது இறப்பு பற்றி பொய்யான தகவலை வலை தளங்களில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.
மதுரை விமான நிலையத்தில் இன்று சிங்கப்பூரில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் வந்த, சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த கணேசன் மகன் சேதுபதியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இவர் 2018ஆம் ஆண்டு குற்ற வழக்கில் ஈடுபட்டு அதன் பின் தலைமறைவாகி விட்டவர். சுங்கத்துறை அதிகாரிகள் தந்த தகவலை தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் எமனேஸ்வரம் போலீசார் சேதுபதியை கைது செய்தனர்.
பேராவூரணியில் நீலகண்ட பிள்ளையார் கோவில் வளாகத்தில் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. இன்டர்நேஷனல் பிரைட் வேர்ல்ட் ரெக்கார்ட் பிரதிநிதி நாகராஜன் முன்னிலையில் பேராவூரணியை சேர்ந்த ஜெ. மணிகண்டன் என்பவர் 18 நிமிடங்களில் 558 தோப்புக்கரணம் செய்து சாதனை படைத்தார். அவருக்கு அதற்கான சான்றிதலும் கேடயமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார் கலந்துகொண்டார்.
நாகை மாவட்டம் தலைஞாயிறு தாலுகாவில் உள்ள வெள்ளப்பள்ளம் வானவன்மாகதேவியில் இன்று காலை 11 மணியளவில் திடீரென வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன. இது என்னவென்று தெரியாமல் அலறி ஊர்மக்கள் வீட்டைவிட்டு வெளியேறினர். இங்கு நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடக்கோரி நீண்ட நாட்களாக விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருச்சி, திருவெறும்பூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், நடைபெற்ற தேர்தல் பிரச்சார பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான பிரதீப் குமார் அவர்கள் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ,துண்டு பிரசுரங்களை வழங்கி, பேரணியில் கலந்து கொண்டு சென்றார்.
Sorry, no posts matched your criteria.