India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரி மாவட்டம் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு அவர்கள் தலைமையில் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம் சார்பாக 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தர்மபுரி தேர்தல் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டி இன்று நாம் தமிழர் கட்சியினர் 2 மணி அளவில், தேர்தல் அதிகாரியுமான மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி அவர்களிடம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில் நாம் தமிழர் கட்சியின் கூட்டணி இருக்கும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மௌன்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இன்று (26.03.2024) பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடைபெற்றது. பொதுத்தேர்வு நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது தேர்வு கண்காணிப்பாளர் மற்றும் ஆசிரியர் உடன் இருந்தனர்.
கோடை வெப்ப அலையை சமாளிக்க வெப்ப காலத்தில் ஏற்படும் நோய்களை சமாளிக்கவும் அவற்றுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் புதுவையில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆகவே மக்கள் அதிக சூர்ய வெப் பத்தால் உருவாகும் அயர்ச்சி மற்றும் பக்கவாதத்தை தடுத்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று புதுவை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
மல்லூர் ரயில்வே யார்டில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், வருகின்ற மார்ச் 30-ம் தேதி வரை சேலம் – கரூர் ரயில்கள் இருமார்க்கத்திலும் ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் சேலம் – கரூர் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும் நிலை உருவாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் தொடக்க கல்வி பட்டய தேர்வு எழுத விரும்பும் தனி தேர்வர்கள் மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தேர்வர்கள் ஒட்டன்சத்திரம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (DIET) மூலம் இணைய வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
நெல்லை பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் நாளை (மார்ச் 27) மதியம் 12 மணியளவில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதையடுத்து, வேட்புமனுத் தாக்கல் நிகழ்ச்சியில் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்படி கிழக்கு மாவட்ட தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடலூர், முதுநகர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்நிலையில் இன்று (26/03/2024) எள் வரத்து 0.56 மூட்டை, மணிலா வரத்து 77.45 மூட்டை வந்துள்ளது. இது மட்டுமல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் கடலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு இன்று விற்பனைக்கு வரவில்லை.
தஞ்சையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “பா.ஜ.க 3-வது முறையும் ஆட்சி அமைத்தால், இதுதான் கடைசி தேர்தல் என்கிற சூழ்நிலை ஏற்பட்டு விடும். இதை காஷ்மீர் முதல் குமரி வரை உள்ள மக்கள் புரிந்து கொண்டனர். எனவே, வருகிற தேர்தல் மூலம் இந்தியா கூட்டணியின் ஆட்சிதான் அமையும் என்பதில் சந்தேகமில்லை. இதைத்தான் மக்கள் உணர்வுகள் பிரதிபலிக்கின்றன” என கூறினார்.
திருப்பத்தூர் காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளாக கருதப்படும் கந்திலி, செவ்வத்தூர், தாதன் குட்டை மற்றும் காக்கங்கரை ஆகிய வாக்குச்சாவடிகளிலும் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாடப்பள்ளி பகுதிகளில் உள்ள வாக்கு சாவடிகளையும் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் இன்று பார்வையிட்ட ஆய்வு செய்தார்.
Sorry, no posts matched your criteria.