India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் 600 – க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் 3000 க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதை தடுக்கும் வகையில் 1315 மாநகர பேருந்துகளின் கீழ் இருபுற பக்கவாட்டிலும் தடுப்புக் கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 45 வயதுடைய ஆண் ஒருவருக்கு மனைவி (ம) 3 மகள்கள் உள்ளனர். மது பழக்கம் உள்ள அவர் தனது 13 வயதுடைய 3-வது மகளுக்கு கடந்த 2 மாதமாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து அவரது மனைவி தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது அவர செய்தனர்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அர்ஜுனன் (30) கம்பி கட்டும் வேலை செய்து வருகிறார். இவர், வேலூரில் உள்ள நண்பர் சிவகுமார் வீட்டுக்கு சென்றுள்ளார். இதையடுத்து அப்துல்லா புரத்தில் இருவரும் இன்று மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் சிவகுமார் தன்னிடம் இருந்த பீர் பாட்டிலை உடைத்து அர்ஜுன் கழுத்தில் குத்தி விட்டு தப்பியுள்ளார். இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
தமிழ்நாடு நிலஅளவை, நிலவரித்திட்டத்துறை www.tnlandsurvey.tn.gov.in என்ற இணையதளத்தை NIC மூலம் உருவாக்கியுள்ளது. அதில் பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் இணையவழி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்டுள்ள இணையதளம் மற்றும் “தமிழ் நிலம்” செயலி
மூலம் நில அளவைத் தொடர்பான விவரங்களைப் பார்வையிட்டு பயனடையலாம் என தேனி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கயத்தாறு அருகே கரிசல்குளம் கிராமத்தில் குருசாமி பிள்ளை மகன்கள் சுப்பையா, சங்கரபாண்டிஆகியோருக்கு இட பிரச்சனைகள் காரணமாக நேற்று சங்கர பாண்டியன் அண்ணன் மனைவிசண்முகலட்சுமியைஉன்னால்தான்எனக்கும்எனதுஅண்ணனுக்கும் சண்டைவருகிறது என கூறிமறைத்துவைத்திருந்த அறிவாளால் சண்முக லட்சுமி சங்கரபாண்டி வெட்டினார். போலீசார் வழக்கு பதிவு கைது செய்தனர்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் ராஜபாளையத்தை சேர்ந்த கணவன் – மனைவியான பாக்கியஸ்வரன் (49) வசந்தலட்சுமி (42) ஆகிய இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் போலீசார் இருவரது உடலையும் மீட்டு வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், “தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன்படி, விருதுநகர் உள்ளிட்ட 18 மாவட்டங்களுக்கு இன்று இரவு 7 மணி வரையும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தமாக 2 லட்சத்து 98 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் வரும் ஜூன் 10ம் தேதி தொடங்கி ஜூலை 10ம் தேதி வரை 57 தடுப்பூசி போடும் குழுக்களை கொண்டு இந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முதுகுளத்தூர் அருகே இறைச்சிகுளம் பேராயிரமூர்த்தி அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா நேற்று இரவு நடந்தது. சுவாமி குதிரை, தவழும் பிள்ளை உள்ளிட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. நெல், நவதானியங்களை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தினர். பக்தர்கள் இன்று காலை பொங்கல் வைத்து வழிபட்டனர். இதன் பின் கிடா வெட்டு நிகழ்ச்சி நடந்தது. 7 ஆண்டுகளுக்கு பின் நடந்த விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இன்று 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், “தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன்படி, புதுகை உள்ளிட்ட 18 மாவட்டங்களுக்கு இன்று இரவு 7 மணி வரையும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Sorry, no posts matched your criteria.