India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் முடிவடைந்தது. தொடர்ந்து வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த கல்லூரியில் சிறப்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 59 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அப்போது மதுவிலக்கு அமல் பிரிவு துணை கண்காணிப்பாளர் லாமேக் உட்பட பல்வேறு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
குரூப்-1 க்கான முதல்நிலைத் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் சிறந்த பயிற்றுநர்களை கொண்டு 11.06.2024 முதல் துவங்கப்படவுள்ளது. மேலும் விபரங்களுக்கு மையத்தை நேரிலோ அல்லது 6379268661
என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு தேனி மாவட்ட
ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென்காசி மாவட்டத்தில் அயலக தமிழர் நல வாரிய அடையாள அட்டை இணைவதற்கு இணைய வழி வாயிலாக பதிவு செய்யலாம். ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.https://nrtamils.tn
gov.in என்ற இணையதளத்தில் வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம் என்றார்.
புதுமைப்பெண் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது 12ம் வகுப்பு முடித்த மாணவிகள் ஆதார் எண், செல்போன் எண், வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் தாங்கள் சேர உள்ள கல்வி நிறுவனங்களின் வழியாக விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்தார்.
தாராபுரத்தில் நாளை 5 ஆயிரத்து 629 பேர் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு எழுதுகிறார்கள். டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு நாளை காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெற உள்ளது.
தாராபுரத்தில் மகாராணி கலைக் கல்லூரி, விவேகம் பள்ளி, அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, புனித ஆலோசியஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் 5629 பேர் தேர்வு எழுதுகிறார்கள் என வட்டாட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
நெல்லையப்பர் கோயில் ஆணி தேரோட்ட திருவிழா ஜூன் 13 கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஜூன் 21ம் தேதி ஆனித் தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தை முன்னிட்டு ரத வீதிகளில் போக்குவரத்து இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டது. சொக்கப்பனை முக்கு வழியாக பஸ்கள், வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் சுவாமி சன்னதி மண்டபத்தின் முன் மரத்தடி போடப்பட்டு ரத வீதிகளில் வாகனங்கள் செல்ல முடியாதபடி மறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூன் 10ஆம் தேதி முதல் மக்கள் குறைதீர் கூட்டம் வழக்கம் போல் நடைபெறும் என்று ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
தருமபுரி மற்றும் அரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் 24 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு 10/05/ 2024 முதல் 07/ 06 /2024 வரை விண்ணப்பிக்கும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது 13/ 06/ 2024 வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 94458 03042, 93617 45995 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி பாராளுமன்ற தொகுதி எம்பி ராணி ஸ்ரீகுமார் இன்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ வேலுவை சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் தென்காசி மாவட்டம் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் தென்காசி புறவழிச் சாலை, சுரண்டை நகர புறவழிச்சாலை பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தார்.
ஈரோடு மாவட்டம் ஆசனூர் மற்றும் பர்கூர் பகுதியில் உள்ள பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி என 7 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் சேர்த்து முன்னுரிமை மற்றும் நலத்திட்ட உதவிகளை பெற்று கல்வி பயிலலாம் என கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.