Tamilnadu

News March 25, 2024

தர்மபுரியில் திமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

image

தருமபுரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வக்கீல் ஆ.மணி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சாந்தியிடம் வேட்புமனுவை வழங்கினார். உடன் உழவர் மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர்கள் பழனியப்பன் தடங்கம் சுப்பிரமணி இருந்தனர்.

News March 25, 2024

வேட்புமனு தாக்கல் செய்த காங்கிரஸ் வேட்பாளர்

image

கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கோபிநாத் போட்டியிடுகிறார். அவர் இன்று (மார்ச் 25) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியில் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.

News March 25, 2024

அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

image

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் குமரகுரு, மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலர் ஷ்ரவன்குமாரிடம் தனது வேட்பு மனுவினை இன்று தாக்கல் செய்தார். இந்நிகழ்வின் போது முன்னாள் அமைச்சர் மோகன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ பிரபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

News March 25, 2024

முன்னாள் படை வீரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி

image

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு விருப்பம் உள்ள 65 வயதிற்கு உட்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் (JCO’s) மற்றும் இதர முன்னாள் படைவீரர்கள் (OR) தங்கள் விருப்பத்தினை தெரிவிக்கலாம். அதன்படி முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகம், தூத்துக்குடியில், தங்களது படைவிலகல் சான்று, அடையாள அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம் என கூறப்படுகிறது.

News March 25, 2024

வேட்புமனு தாக்கல் செய்த இ.கம்யூ. வேட்பாளர்

image

திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தற்போதைய எம்பி சுப்பராயன் போட்டியிடுகிறார். அவர் இன்று (மார்ச் 25) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியில் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.

News March 25, 2024

வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்பு மனு தாக்கல் 

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வாணியம்பாடி, குடியாத்தம், அணைக்கட்டு, கே.வி.குப்பம், வேலூர் ஆகிய 6 சட்டம் மன்ற தொகுதிக்கு உட்பட்ட வேலூர் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார், இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News March 25, 2024

திருவள்ளூர்: தங்கையின் கணவரை வெட்டிய சகோதரி

image

செங்குன்றம் விஜயநல்லூரை சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மனைவி மேனகா கணவரை பிரிந்து கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள துராபள்ளம் கிராமத்தில் தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று மனைவியை பார்க்க துராபள்ளம் வந்த நந்தகுமார் மதுபோதையில் மேனகாவை வெட்ட முயன்றார். இதில் ஆத்திரமடைந்த மேனகாவின் அக்கா ஷோபனா கத்தியை பிடுங்கி நந்தகுமாரை சரமாரியாக வெட்டினார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 25, 2024

குமரி: பாஜக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

image

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக, காங்கிரஸ், நாம் தமிழர், அதிமுக உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று எம்.ஆர் காந்தி  மற்றும் பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

News March 25, 2024

விருதுநகர் தேமுதிக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

image

விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான ஜெயசீலனிடம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி,அதிமுக நிர்வாகிகள்,தேமுதிக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

News March 25, 2024

ஊட்டி: எல்.முருகன், அண்ணாமலை பேரணி

image

நீலகிரி மக்களவை பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் எல்.முருகன், மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் மனு தாக்கல் செய்ய ஊர்வலமாக ஊட்டி காபி ஹவுஸ் பகுதியிலிருந்து இன்று (மார்ச் 25) புறப்பட்டுச் சென்றனர். திரளான மக்கள் கூட்டத்தில் வாகனத்தில் நின்றபடி வாக்காளர்களுக்கு கை அசைத்து உற்சாகத்தை தெரிவித்தபடி கலெக்டர் அலுவலகம் சாலையை அடைந்தனர். பின்னர் எல்.முருகன் தனது வேட்புமனுவை தாக்கல்செய்தார்.

error: Content is protected !!