India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் ஒரே நாளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் பொருட்டு மதுரை மாவட்ட சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் ஜூன்.06 அன்று காலை 10 மணி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான ஒருநாள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் சங்கீதா இன்று தெரிவித்துள்ளார்.
முத்துப்பேட்டை அடுத்த கள்ளிக்குடி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று முதல்நாள் பள்ளி திறப்பையொட்டி வட்டார கல்வி அலுவலர் இராமசாமி தேசிய கொடியேற்றி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்று மாணவர்களுக்கு பாட புத்தகங்களை வழங்கி பேசினார். இதில், தலைமையாசிரியை வாசுகி, ஆசிரியர் சுரேஷ், மாணவர்கள் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.
காரைக்காலில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் நுகர்வோர் குறைதீர்ப்பு முகாம் ஜூன்.13ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 11.00 மணியில் இருந்து 13.00 மணி வரை காரைக்கால் மின்துறை தலைமை அலுவலகத்தில் வருகை தந்து மின் நுகர்வோர் சேவை குறைபாடுகளை நேரடியாக கேட்க உள்ளது. அதனால் மின் நுகர்வோர் குறைபாடுகள் சம்பந்தமாக நேரடியாக புகார் அளிக்கலாம் என்று மின்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பிரெஞ்சு பாடத்தை அறிமுகப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், அலியான்ஸ் பிரான்சே அமைப்புடன் இணைந்து பிரெஞ்சு மொழி கற்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மேல்நிலைப் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. பின், விரிவுபடுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இளையான்குடி வட்டம், சூராணம் உள்வட்டம், வல்லக்குளம் கிராமத்தில், வரும் ஜூன். 12ஆம் தேதி அன்று காலை 10.00 மணியளவில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறவுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் இன்று நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 231 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
திருத்தணி அருகே காஞ்சிப்பாடி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்து வரும் பழங்குடியின மாணவர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி சீனிவாச பெருமாள் நோட்டு, புத்தகம், பேனா மற்றும் சீருடை ஆகியவற்றை வழங்கினார். உடன் டிஎஸ்பி விக்னேஷ் தமிழ்மாறன், K.K.C. சிறப்பு உதவியாளர் பிரகாஷ் உள்பட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் செய்திருந்தனர்.
கோடை விடுமுறை சீசனில் 10 லட்சம் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தந்தனர். இதில் 4,84,000 பேர் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்த்தனர். ஏப்ரல் மாதம் 1,43,000, மே மாதம் 1,80,300, கோடை விடுமுறை சீசன் முடிந்த நாளான நேற்று வரை 60,000 சுற்றுலா பயணிகளும் படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்த்துள்ளனர். நேற்று மட்டும் 7,600 பேர் விவேகானந்தர் மண்டபத்தை பார்த்தனர்.
ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி தேர்தல் நடத்துவது தொடர்பாகவும், வாக்கு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டார்.
கேளம்பாக்கம் ஊராட்சி பள்ளியில் இன்று கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் திருப்போரூர் முன்னாள் எம்எல்ஏ இதயவர்மன் பங்கேற்று மாணவர்களுக்கு பூங்கொத்து, சாக்லேட் கொடுத்து வரவேற்றார். நிகழ்ச்சியில் கேளம்பாக்கம் ஊராட்சி தலைவர் ராணி எல்லப்பன், வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.