India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் ஆலயத்தின் 118வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக ஜூன் 11 – ஜூன் 14 வரை சென்னை எழும்பூர்-சேலம் எக்ஸ்பிரஸ் ரயில், சேலம்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஜூன் 13ல் புதுச்சேரி-மங்களூரு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் ஜூன் 15ல் யஷ்வந்த்பூர்-புதுச்சேரி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் மேல்நாரியப்பனூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குற்றாலம் பிரதான அருவியல் இன்று (ஜூன் 11) தண்ணீர் அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் குளிர்ந்த காற்று வீசுகிறது. வேலை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை சற்று குறைவாகவே காணப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குற்றாலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேனி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தங்கதமிழ்ச்செல்வன் எம்.பி.- ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எம்.பி-யாக பதவியேற்ற நிலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுக உயர்நிலை செயல் திட்ட தலைவருமான எல்.மூக்கையாவை இன்று மரியாதை நிமித்தமாக தங்கதமிழ்ச்செல்வன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
திருச்சி மாவட்டம் புதிய விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று ( ஜூன் 11) முதல் பயன்பாட்டிற்கு வந்ததை தொடர்ந்து விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி, மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமிஷனர் ஹரி சிங் நாயால் ஆகியோர் பயணிகளுக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். நிகழ்வில் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி மாவட்டம் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநகர் பகுதியில் வாகன ஓட்டுனர் சங்கர் பெயர் பலகையை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திறந்து வைத்தார்.இந்நிகழ்வில் மாநில ஓட்டுநர் அணி செயலாளர் செங்குட்டுவன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் ஓட்டுநர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
புதுக்கோட்டை நரிமேட்டிலுள்ள அன்னை சத்யா நினைவு அரசு குழந்தைகள் இல்லத்திலிருந்து குற்ற வழக்குகளில் தொடர்புடைய மூன்று சிறுமிகள் கடந்த மாதம் தப்பியோடினர். இதில் போலீசார் விசாரணை நடத்தி திருச்சி மற்றும் மதுரையிலிருந்து 2 சிறுமிகளை மீட்டு இல்லத்தில் சேர்த்தனர். இந்நிலையில் திருக்கோகர்ணம் போலிஸார் மற்றொரு சிறுமியையும் சென்னையிலிருந்து மீட்டு அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் நேற்று சேர்த்தனர்.
நடிகர் தாடி பாலாஜி அண்மைக் காலமாக பள்ளிக்கூடம் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இந்தநிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசமங்கலம் ஊராட்சியில் இயங்கி வரும் அரசு ஊராட்சி பள்ளிக்கு தாடி பாலாஜி பீரோ ஒன்றை அன்பளிப்பாக அப்பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் இன்று (ஜூன் 11) வழங்கினார்.
ரெட்டியார் பாளையம் புதுநகரில் இன்று கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியான விஷவாயு வீடுகளின் கழிவறை வழியாக வெளியேறியதால் உயிரிழப்பு ஏற்பட்டது. மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் மருத்துவமனையில் அனுமதி. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் சம்பவ இடத்திற்கு முதல்வர் ரங்கசாமி வந்து ஆய்வு செய்து விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டாரங்களில் உள்ள சிறிய ரக பட்டாசு தொழிற்சாலையின் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கடந்த சில தினங்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில், தொழிலாளர் நலன் மற்றும் குழந்தைகளின் கல்வி நலன்களை கருத்தில் கொண்டு இன்று முதல் (11.06.24) அனைத்து பட்டாசு ஆலைகளிலும் பணியினை துவக்க டாப்மா சங்க உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
திருமங்கலம் அருகே சாத்தங்குடி பகுதியில் வெறிநாய் கடித்து 12 நபர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வெறிநாய் நடமாட்டத்தால் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளதால் மாவட்ட ஆட்சியர் திருமங்கலம் தொகுதியில் சுற்றிதிரியும் வெறிநாய்களை பிடிக்க நகராட்சி, ஊராட்சிகளுக்கு உரிய அறிவுரை வழங்கி மக்களின் அச்சத்தை போக்க திருமங்கலம் எம்.எல்.ஏ ஆர். பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.