India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி, நடு பல்பு சிக்னலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நின்று செல்கின்றன.இந்த நிலையில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக இந்த சிக்னலில் மழைநீர் தேங்கி கிடக்கிறது.இதனால் இருச்சக்கர வாகன ஓட்டிகள் அந்த பகுதியில் நிற்க கூட முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே தேங்கியுள்ள மழை நீரை அகற்றி நிரந்தரமாக மழை நீர் வெளியேறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் இன்று கோரிக்கை விடுத்தனர்.
நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு இன்று, இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தங்கராஜ் தலைமை தாங்கினார். நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் , நீட் தேர்வில் நாடு முழுவதும் நடைபெற்றுள்ள முறைகேடுகளை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள 10 தாலுகா அலுவலகங்களிலும் இன்று முதல் வருகிற 27-ம் தேதி வரை ஜமாபந்தி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை கடலூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கியது. இதற்கு தனித் துணை ஆட்சியர் ரமா தலைமை தாங்கினார். தாசில்தார் பலராமன் முன்னிலை வகித்தார். இதையடுத்து பொதுமக்கள் குடும்ப அட்டை, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனு அளித்தனர்.
2025ம் ஆண்டு குடியரசு தினத்தன்று அறிவிக்கப்பட உள்ள பத்ம விருதிற்கான தகுதியாளர்களை தேர்வு செய்யவதற்கான நாமினேஷன் உரிய படிவத்தில், கூடுதல் விவரங்கள் மற்றும் தேவையான ஆவணங்களுடன் இயக்குனர், செய்தி மற்றும் விளம்பரத் துறைக்கு 31.07.2024 முன்பாக அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்விருத்திற்கென புதுச்சேரி அரசால் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட குழுவினரால் தேர்ந்தெடுத்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படுவர்
ஜூன் 14-ம் தேதி முதல் மாஞ்சோலையில் குடியிருக்கும் மக்களுக்கு மின் இணைப்பு மற்றும் குடிநீர் தடை செய்யப்படும் என நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்தநிலையில், இன்று (ஜூன் 11) நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, 2028-ம் ஆண்டு வரை உரிமம் இருப்பதால் மாஞ்சோலையில் குடிநீர், மின் இணைப்பு தடை செய்யப்படாது என உறுதி அளித்தார்.
தூத்துக்குடியில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழு சார்பில் இலவச சட்ட விழிப்புணர்வு வேன் பிரச்சார இன்று(ஜூன் 11) துவங்கியது. இதனை மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) தாண்டவன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் பொது மக்களுக்கு இலவச சட்ட உதவிகள் பற்றிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்படுவதுடன் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட உள்ளது.
விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளராகப் பணியாற்றி வந்த நா.புகழேந்தி மறைவெய்திய நிலையில், கௌதம் சிகாமணி விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
மேலும், ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பை வெளியிட்டார்.
மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி பகுதிகளைச் சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் சபாநாயகர் அப்பாவுவை இன்று (ஜூன் 11) நேரில் சந்தித்து மனு அளித்தனர். மாஞ்சோலை எஸ்டேட் மக்கள் தொடர்ந்து அந்த பகுதியிலேயே குடியிருக்க ஏதுவாக எஸ்டேட் நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: திருச்சி மாநகரத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று 50,655 கிலோ தூசி மற்றும் வண்டல் நீக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 25 தினத்திலிருந்து ஜூன் 9 வரை மொத்தம் 42.5 கிலோமீட்டர் கால்வாய் தூர்வாரும் பணியும், ஸ்ரீரங்கம் பகுதியில் இன்று(ஜூன் 11) 12 மரக்கன்றுகள் நடும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை அதிகளவு கொண்டு வந்து விடுவதால் பேருந்தில் வரக்கூடிய நோயாளிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இதற்கு மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.