India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சைபர் குற்றவாளிகள் பல்வேறு வகையான மோசடிகளில் ஈடுபடுகின்றனர். இதில் அழகு, இனிமையான பேச்சுக்கள் மூலம் மக்களை கவர்ந்து வலையில் விழச்செய்து பிளாக்மெயில் செய்கின்றனர். இதில் பாதிக்கப்பட்டால் https://cybercrime. gov.in/ ல் புகார் அளிக்கவும். மேலும் 1930 என்ற சைபர் கிரைம் இலவச எண்ணிலும் புகார் அளிக்கலாம் என்று இன்று (ஜூன் 11) வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் நெல்லை மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை நீர் நிலைகளில் படிந்துள்ள மண் வண்டல் மண்ணை விவசாய பயன்பாட்டிற்காக இலவசமாக எடுத்துச் செல்ல விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார். மேலும் மண் வண்டல் மண் எடுத்துக் கொள்ள அனுமதி கோரும் விண்ணப்பங்களை உடனடியாக பெற்று பரிசீலனை செய்து ஆணை பிறப்பிக்க ஏதுவாகும் வகையில் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்களுக்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்யலாம் எனத் தெரிவித்துள்ளார்.
கோவை ரயில்வே அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மேட்டுப்பாளையம் முதல் கோவை வரை இயக்கப்படும் ரயில், இரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 13ஆம் தேதி வடகோவை ரயில் நிலையத்தோடு ரயில் நிறுத்தப்படும். அதேபோல் கோவையில் இருந்து இயக்கப்படும் மறுமார்க்க ரயில் வடகோவையில் இருந்து இயக்கப்படும் என்று தெரிவித்தனர்.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாவட்ட ஆட்சியர் இல்லம், வருமானவரித்துறை அலுவலகம் என பாதுகாப்பு மிகுந்த ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இங்கு காலை, மாலை வேலைகளில் தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் நடை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த சாலையின் ஓரத்தில் இருந்த சந்தன மரம் மர்ம நபர்களால் வெட்டி கடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. புதிய ரேஷன் அட்டை பெறுபவர்கள், ரூ.1000 மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்பத் தலைவிகளை மகளிர் உரிமைத் திட்டத்தில் இணைத்து, ஜூலை அல்லது ஆகஸ்ட்டில் இருந்து ரூ.1000 வழங்கப்படும் என்று உணவுப் பொருள் வழங்கும் துறை தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைகள் தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நெடுஞ்சாலை துறை கவனம் செலுத்தாததால் தினந்தோறும் 5 கிலோமீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியை சேர்ந்தவர் ஜெயபாக்கியம் (24). இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இன்று ஜெயபாக்கியம் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
வத்திரப் அருகே எஸ்.கொடிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன்.இவரது மகன் ஜெகதீஸ் என்பவர் அத்திகோயில் பகுதியில் உள்ள தென்னந்தோப்பை குத்தகைக்கு எடுத்து பார்த்து வருகிறார். கான்சாபுரம் -அத்திகோயில் சாலையில் பைக்கில் ஜெகதீஸ் சென்றபோது எதிரே வந்த வனராஜ் என்பவர் மோதியதில் பலத்த காயமடைந்து இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கூமாபட்டி
போலீசார் நேற்று இரவு வனராஜ் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
பன்முக திறமைகள் புரிந்த நபர்களுக்கான “பத்ம விருது” குடியரசு தின விழா அன்று வழங்கப்பட உள்ளதால் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் தகுந்த ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்விருதுக்கு தொலைபேசி எண்.04286-299460 என்ற அலுவலக முகவரி மற்றும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து கிராம கணக்குகளை தணிக்கை செய்யும் ஜமாபந்தி இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. நாளை முத்துசாமிபுரம் வடக்கு சிலுக்கன்பட்டி அய்யனடைப்பு ராமநாதபுரம் தளவாய்புரம் பேரூரணி ஆகிய பகுதிகளுக்கு ஜமாபந்தி நடை பெறுவதால் கிராம மக்கள் பங்கேற்று பயனடைய மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.