Tamilnadu

News June 12, 2024

சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும்

image

சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (மதியம் 1) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. நேற்று நள்ளிரவு முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததால், கோடை வெயிலில் இருந்து பொதுமக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

News June 12, 2024

சேகர் பாபுவிடம் வாழ்த்து பெற்ற அருண் நேரு

image

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று பதவியேற்க இருக்கும் கே.என். அருண் நேரு இன்று (ஜூன் 12) காலை சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும், திமுக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களிடமும் அவர் வாழ்த்து பெற்றார்.

News June 12, 2024

கட்டண விவர அறிவிப்பு பலகை வைக்க நடவடிக்கை

image

நீலகிரி மாவட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளின் காலாண்டு ஆய்வு கூட்டம் நேற்று மாலை நடந்தது. மாவட்ட கலெக்டர் அருணா தலைமை வகித்தார். இதில் மாவட்ட அளவில் மாவட்டத்திலுள்ள தனியார் மெட்ரிக் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பள்ளி அறிவிப்பு பலகை மூலம் தெரியப்படுத்த முதன்மை கல்வி அலுவலர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

News June 12, 2024

பட்டாசு ஆலைகள் விபத்துக்கு காரணம் – அறிக்கை வெளியானது

image

விருதுநகரில் உள்ள பட்டாசு ஆலைகளில், அடிக்கடி ஏற்படும் விபத்துகள் குறித்த காரண அறிக்கையை “உண்மை கண்டறியும் குழு” மதுரையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
அதில், “பட்டாசு ஆலையை மூன்றாம் நபருக்கு குத்தகைக்கு விடுவது, அனுமதிக்கப்பட்டதை விட அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்வது, பழமையான பட்டாசு கொட்டகை, ஆபத்தான கெமிக்கலை பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி கையாள்வது” போன்றவை தான் காரணம் என்று தெரிவித்துள்ளது.

News June 12, 2024

வேலூரில் விபத்து: 20 பேர் படுகாயம்

image

வேலூர் அடுத்த கருகம்புத்தூர் அருகே இன்று காலை பழுதாகி நின்றுகொண்டிருந்த லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. பேருந்தில் பயணித்த 20 பேர் படுகாயமடைந்து அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யார் முந்திச் செல்வது என இரு தனியார் பேருந்துகளுக்கிடையே ஏற்பட்ட விபரீத போட்டியால் இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்து குறித்து விரிஞ்சிபுரம் போலீசார் விசாரித்துவருகின்றனர்.

News June 12, 2024

திருச்சியில் வேலைவாய்ப்பு முகாம்

image

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வரும் ஜூன் 14ஆம் தேதி சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில், தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற 20க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. 10, 12ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, இளநிலை, முதுநிலை பட்டதாரிகள், பொறியியல் படித்த இளைஞர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.

News June 12, 2024

மீண்டும் தரமில்லாத ராகி: மக்கள் அதிருப்தி

image

நீலகிரி ரேஷன் கடைகளில் இலவச அரிசிக்கு பதில் இலவசமாக ஒரு குடும்பத்துக்கு 2 கிலோ கேழ்வரகு வழங்கும் திட்டத்தை கடந்தாண்டு மே 3ம் தேதி அரசு துவக்கியது. நீலகிரியில் 4.40 லட்சம் கிலோ தேவை என அறிவித்து பெங்களூருவிலிருந்து கொள்முதல் செய்து வழங்கப்பட்டுவருகிறது. தரமற்ற கேழ்வரகு வழங்குவதால் மக்கள் வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் தரமற்ற கேழ்வரகு ராகி வழங்கப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

News June 12, 2024

திருச்செந்தூர்: நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

image

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை(ஜூலை 13) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆத்தூர், தெற்காத்தூர், தலைவன் விடலி கீரனூர், ஆறுமுகநேரி, பேயன்விலை, காயல்பட்டினம், வீரபாண்டிய பட்டினம், திருச்செந்தூர், குரும்பூர் காயாமொழி சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News June 12, 2024

தஞ்சை: உரிமை கோராத 26 உடல்கள் அடக்கம்

image

தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆதரவின்றி சிகிச்சை பெற்ற நோயாளிகள் இறந்த பின்னரும், அவர்களது உடலை உரிமை கோர யாரும் வராத நிலையில் அவை பிரேதக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் 26 உடல்களையும் நேற்று(ஜூன் 11) ராஜகோரி மயானத்தில் காவல்துறை, அரசு மருத்துவக் மருத்துவமனை நிர்வாகம், தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டது.

News June 12, 2024

குழந்தை தொழிலாளர் முறை அகற்ற உறுதிமொழி

image

சர்வதேச குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திருச்சி தென்னக ரயில்வே மண்டல பயிற்சி மையத்தில் நேற்று (ஜூன் 11) நடைபெற்றது. இதில், திருச்சி மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பிரபு தலைமை வகித்தார். 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒரு போதும் எந்த வித பணியிலும் ஈடுபடுத்த மாட்டோம் என 300-க்கும் மேற்பட்ட ரயில்வே பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

error: Content is protected !!