India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறைக்கு பொறுப்பேற்று உள்ளார். மேலும் 2வது முறையாக மீண்டும் இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள எல்.முருகன் பாரதிய ஜனதா கட்சியின் நாமக்கல் கிழக்கு மாவட்டத்தின் செயலாளர் ராம்குமார் டெல்லியில் நேற்று சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒவ்வொரு புதன் கிழமையும் வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (ஜூன் 12) நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 25 கோரிக்கை மனுக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பெற்றுக் கொண்டார். மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் கலவரம் செய்தால் தான் பாஜகவை வளர்க்க முடியும் என்ற இந்து முன்னணி நிர்வாகி மற்றும் பாஜக நிர்வாகிகள் பேசிய ஆடியோ வைரலான நிலையில் இன்று (ஜூன் 12) எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி தலைமையில் மாநகர காவல் ஆணையாளரிடம் கலவரத்தை தூண்ட நினைக்கும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர். இதில் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் புதிய திட்டப் பணிகள் மாணவர்களுக்கான உதவித்தொகைகள் உள்ளிட்ட பயன்கள், இந்த நடப்பு நிதியாண்டில் (2024-2025) செய்ய வேண்டிய அனைத்து பணிகளும் தகுந்த காலத்திற்குள் செய்து முடிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நீலகிரி: கோடை சீசன் முடிந்தவுடன் பயணிகள் வருகை குறைந்துவிடும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது வெளி மாநில சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இத்துடன் ஜூன் 15 வரை மலை ரயில் முன்பதிவு செய்து காத்திருப்போர் 6000 பேர் என ரயில்வே தெரிவித்து உள்ளது. ஊட்டி, குன்னூர் ரயில் நிலையங்களில் இன்று பயணிகள் கூட்டம் கூடுதலாக இருந்தது.
சென்னை விமானநிலையத்தில் இருந்து கொல்கத்தாவிற்கு புறப்பட தயாராக விமானத்தில், 17வயது சிறுவன் ஒருவர் அவசரகால கதவை திறக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து விமான நிலைய போலீசார், சிறுவனை கீழே இறக்கி எச்சரித்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர். சிறுவன் செய்த இச்செயலால், விமானம் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
புதுவை முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; குழந்தைப் பருவம் மகிழ்ச்சி, சிரிப்பு மற்றும் கல்வி கற்பதற்கான காலமாக இருக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி, விளையாட்டு மற்றும் பிரகாசமான எதிர்காலத்திற்கான உரிமையை நிலை நாட்ட உறுதியேற்போம் என்றும் புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் வாழ்த்து தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று எஸ்பி சந்தீஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த மக்கள் தங்களது குறைகளை மனுக்களாக எஸ்பியிடம் கொடுத்தனர். குறிப்பாக குடும்ப பிரச்சனை, பணம் தகராறு உள்ளிட்ட மனுக்கள் கொடுக்கப்பட்டன. மனுக்களை பெற்ற எஸ்பி சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பி விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
ஒசூர் நரசிம்மா காலனி பகுதியை சேர்ந்த அனில்குமார் (48) சிப்காட் பகுதியில் தனியார் கிரானைட் விற்பனை பிரிவு மேலாளராக உள்ளார். நேற்று அவர் தொழில் நிமித்தமாக பெங்களூரு சென்று விட்டு மீண்டும் ஒசூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியதில் அனில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் ஓசூர் அட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில் வரும் 21-ம் தேதி திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில், திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, குடும்ப அட்டை, சுய உதவி குழு பயிற்சி, மானியத் தொகை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே இதில் திருச்சியை சேர்ந்த திருநங்கைகள் கலந்து கொண்டு பயனடைய மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.